கந்துவட்டி கும்பலுக்கு முடிவு கட்டுவோம்: விஷால்

கந்துவட்டி கும்பலுக்கு முடிவு கட்டுவோம் என நடிகர் சங்கத் தலைவர் விஷால் தெரிவித்துள்ளார்.

Last Updated : Nov 22, 2017, 10:58 AM IST
கந்துவட்டி கும்பலுக்கு முடிவு கட்டுவோம்: விஷால் title=

கந்துவட்டி பிரச்சனையால் அசோக்குமாரின் தற்கொலை தொடர்பாக நடிகர் சங்கத் செயலாளரும்,  திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால் வெளியிட்டுள்ள அறிக்கையில், தயாரிபாளர் அசோக்குமார் உயிரிழந்தார் என்பதை அறிந்ததும் கடும் வேதனை அடைந்துள்ளேன் என்றும், இதுவரை பொதுமக்களை மட்டுமே அச்சுறுத்தி வந்த கந்துவட்டி இன்று திரைத்துறையிலும் ஒரு உயிரை பலி வாங்கியிருப்பதகவும் தெரிவித்துள்ளார். 

கந்துவட்டி கும்பலின் மிரட்டலுக்கு ஆளாகும் தயாரிப்பாளர்கள் உடனடியாக சங்கத்தை அணுகினால் அவர்களுக்கு ஆலோசனை வழங்கி காப்பாற்ற நங்கள் தயாராக இருக்கிறோம் என்றும் கூறினார். விரைவில் கந்துவட்டி கும்பலுக்கு முடிவு கட்டுவோம் என்று உறுதி அளித்த விஷால், தயாரிப்பாளர்கள் அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளார். 

இதைதொடர்ந்து, அவர் கந்துவட்டி கொடுமையால் தயாரிப்பாளர் அசோக்குமார் உயிரிழப்பே கடைசியாக இருக்கவேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதைத் தொடர்ந்து காவல் துறையினர் விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறினார். 

Trending News