உணவகங்களில் GST 5%-ஆக குறைக்கப்பட்டுள்ளதா?

பாலாஜி பவனில் பா.ஜ.க. மாநில தலைவர் Dr.தமிழிசை சௌந்தரராஜன் அவர்கள் ஆய்வு செய்கிறார். 

Last Updated : Nov 19, 2017, 08:22 PM IST
உணவகங்களில்  GST 5%-ஆக குறைக்கப்பட்டுள்ளதா? title=

உணவகங்களில் ஜி.எஸ்.டி(GST) 5% ஆக குறைக்கப் பட்டிருக்கிறதா இல்லையா? என., பாஜக சார்பில் நாளை ஆய்வு!

உணவகங்களில் ஜி.எஸ்.டி வரி விதிப்பில் செய்யப்பட்ட மாற்றங்கள் கடந்த நவ., 15 அன்று அமலுக்கு வந்தது.

குளிர்சாதன வசதி இல்லாத உணவகங்களில் 12 சதவீதமும், குளிர்சாதன வசதி உடைய உணவகங்களில் 18 சதவீதமும் ஜி.எஸ்.டி வரி என விதிக்கப்பட்டது. அந்த வரி தற்போது 5% குறைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தற்போது உணவகங்களில் ஜி.எஸ்.டி(GST) 5% ஆக குறைக்கப்பட்டிருக்கிறதா இல்லையா என ஆய்வு செய்யும் நிகழ்ச்சி பா.ஜ.க. இளைஞரணியின் சார்பாக நாளை (20-11-17, திங்கட்கிழமை) காலை சரியாக 10 மணியளவில் பாண்டி பஜார் பாலாஜி பவன் ஹோட்டலில் தொடங்குகிறது. 

பாலாஜி பவனில் பா.ஜ.க. மாநில தலைவர் Dr.தமிழிசை சௌந்தரராஜன் அவர்கள் ஆய்வு செய்கிறார். 

Trending News