கோவை வஉசி மைதானத்தில் தற்போது திறக்கப்பட்டுள்ள எங்கள் முதல்வர் எங்கள் பெருமை என்ற முதலமைச்சரின் புகைப்பட கண்காட்சியை இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் நேரில் பார்வையிட்டார். இந்நிகழ்வில் அமைச்சர் செந்தில் பாலாஜி உட்பட திமுகவினர் பலர் உடன் இருந்தனர். அப்போது புகைப்பட கண்காட்சியில் வைக்கப்பட்டிருந்த பல்வேறு புகைப்படங்களின் நிகழ்வுகள் குறித்து அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் ஜி.வி.பிரகாஷ் கேட்டறிந்தார்.
மேலும் படிக்க | சினிமாவில் காலடி எடுத்து வைத்த வெங்கட் பிரபுவின் மகள்
பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சாதாரணமாக இந்த நிலைமைக்கு வரவில்லை மிகவும் கஷ்டப்பட்டு ஒரு கடைசி தொண்டனாக இந்த கட்சியில் இருந்து தற்போது இந்த நிலைமைக்கு வந்துள்ளதை அழகாக இந்த புகைப்பட கண்காட்சியின் எடுத்துக் கூறியுள்ளார்கள்.
அனைவரும் இந்த கண்காட்சியை வந்து பார்க்க வேண்டும். அப்போது முதல்வர் கடந்து வந்த பாதையை அனைவரும் அறிந்து கொள்ளலாம். மிசா வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்த காட்சிகள் என்னை கவர்ந்தது. மேலும் அவரது இளம் வயதில் கிரிக்கெட் விளையாண்டது எல்லாம் என்னுடைய தலைமுறைக்கு தெரியாது. நம்முடைய முதலமைச்சரை பற்றி தெரிந்து கொள்ள இது ஒரு நல்ல இடமாக உள்ளது, அனைவரும் வந்து பார்க்க வேண்டும் என தெரிவித்தார்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ