தமிழகத்தில் 256 இடங்களில் ‘சார்ஜிங்’ மையங்கள்: மத்திய அரசு

தமிழகத்தில் 256 இடங்களில் ‘சார்ஜிங்’ மையங்கள் அமைக்க மத்திய அரசு அனுமதி அளித்து உள்ளது.

Last Updated : Jan 4, 2020, 10:43 AM IST
தமிழகத்தில் 256 இடங்களில் ‘சார்ஜிங்’ மையங்கள்: மத்திய அரசு title=

தமிழகத்தில் 256 இடங்களில் ‘சார்ஜிங்’ மையங்கள் அமைக்க மத்திய அரசு அனுமதி அளித்து உள்ளது.

மோட்டார் வாகனங்களால் ஏற்படும் புகை மாசுவை குறைக்க பேட்டரி வாகனங்களை பயன்படுத்தும்படுத்த மத்திய அரசு வலியுறுத்தி வருகிறது. அதேசமயம் பேட்டரி வாகனங்களுக்கு ‘சார்ஜிங்’ செய்வதற்கான மையங்களையும் அமைத்து வருகிறது.

இந்த நிலையில் தற்போது 62 நகரங்களில் பேட்டரி வானங்களுக்கான 2,636 ‘சார்ஜிங்’ மையங்களை அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இந்த தகவலை மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பிரகா‌‌ஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார். 

‘சார்ஜிங்’ மையங்கள் அமைப்பதன் மூலம் மின்சார வாகனங்களை பயன்படுத்துபவர்களின் நம்பிக்கை அதிகரிப்பதுடன், புதிய மின்சார வாகனங்கள் அறிமுகம் ஆவதற்கான வாய்ப்பும் ஏற்படும் என்று மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பிரகா‌‌ஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார். 

2,636 சார்ஜிங் மையங்களில் தமிழகத்தில் 256 இடங்களில் ‘சார்ஜிங்’ மையங்கள் அமைக்கப்பட உள்ளன. அதன்படி சென்னையில் 141-ம், கோவையில் 25-ம், மதுரையில் 50-ம் அமைக்கப்படும். வேலூர், சேலம், ஈரோடு மற்றும் தஞ்சையில் தலா 10 மையங்கள் அமைக்கப்படும்.

உங்களுக்கு சுவாரஸ்யமான சிறப்பு செய்தி, முக்கிய செய்திகள், அரசியல் குறித்து விவரங்களை தெரிந்துக்கொள்ள நமது ZEE HINDUSTAN TV ஐ பாருங்கள். தற்போது ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒளிப்பரப்பாகிறது.

Trending News