கிசுகிசு : பரவும் காவிமயம்... தூங்கும் ஈரோட்டு இயக்கம்

Gossip, கிசுகிசு : சமூகநீதி ஊர் என சொல்லிக் கொள்ளும் மாநிலத்தில் இப்போது நகரம் முதல் கிராமம் காவிமயமாகிக் கொண்டிருக்கிறது. 

Written by - S.Karthikeyan | Last Updated : Sep 6, 2024, 11:05 AM IST
  • சமூகநீதி ஊரில் பரவும் காவிமயம்
  • தூக்கத்தில் இருக்கும் ஈரோட்டு இயக்கம்
  • இளம் தலைமுறையிடம் பரவும் விஷம கருத்துக்கள்
கிசுகிசு : பரவும் காவிமயம்... தூங்கும் ஈரோட்டு இயக்கம் title=

Gossip News Tamil : "என்னையா நடக்குது இங்க, பள்ளியில ஒருத்தன் பாவ புண்ணியம்ன்னு ஆசிரியர்களுக்கே வகுப்பு எடுக்கிறான், இன்னொரு பள்ளியில மாணவர்கள் ஆசிரியர்களுக்கு பாதைபூஜை செய்ய வச்சி அதை பெருமையா வீடியோ எடுத்து போட்டுட்டு இருக்காங்க, இதெல்லாம் சரியாவே படலயே. இந்த ஊர்லயா இப்படியெல்லாம் நடக்குது. இன்னொரு பக்கம், இத்தனை வருஷமா மூட நம்பிக்கையை ஒழிக்கணும் தெருத்தெருவ பிரச்சாரம் பண்ணிட்டு, சமஸ்கிருதம், இந்தியெல்லாம் வேண்டாம்னு உரக்க கத்திட்டு இருந்துட்டு, எந்த கொள்கையை வேரறுக்கணும்னு காலம்காலமா பேசினாங்களோ, இப்ப அந்த கொள்கையேவே துளிர் விட்டு வளர்கிற மாதிரி அரசே தமிழ்கடவுளுக்கு ’அவாங்க’ முறைப்படி மாநாடு எல்லாம் நடத்திட்டு இருக்கு. 

இதை விமர்சிச்சா பதிலுக்கு சமூகநீதி பேசிட்டு இருங்கிறவங்ககிட்டயே, சமூகநீதி பாடம் எடுக்கிறாங்க"னு யாரோ குசும்பன் கிட்ட போன் பண்ணி பேச, அதை கேட்டுக்கிட்டே காலையில் டீ குடிக்க டீகடைக்கு வந்தான். அவனை பார்த்த டீ மாஸ்டர் "என்ன குசும்பா, ஏதோ முக்கியமான போன் பேசுற மாதிரி இருக்கே?" என கேட்க, "அண்ணே! ஒரு நிமிஷம் இருங்க" என சைகை காண்பிச்சிட்டு, போன்ல உக்கிரமா பேசுனவர் சொன்னதை தீவிரமாக கேட்டுக் கொண்டிருந்தான் குசும்பன். அந்த போனில் பேசியவர் " நான் படிக்கிற காலத்துலயாவது பெரியார், சமூகநீதி, சாதி ஒழிப்பு குறித்து பள்ளிகளில் ஆசிரியர்கள் தீவிரமாக சொல்லிக் கொடுத்தாங்க. ஆனால், அப்பேற்பட்ட பள்ளிகளில் இப்போ மூடநம்பிக்கை குறித்த பிரச்சாரம் வேகமெடுத்திருக்கு. இதெல்லாம் கல்வித்துறையில மேலிடத்துல இருக்கிறவங்களுக்கு தெரியுமா? தெரியாதாண்ணு தெரியல.

மேலும் படிக்க | கிசுகிசு : குடைச்சல் கொடுக்கும் கதர் புள்ளி - கடுப்பில் ஆளும் தரப்பு..!

தலைநகரம் முதல் குமரி முனை வரை பல பள்ளிக்கூடத்துல காவி பயிற்சி வகுப்புகள் ஜோரா நடக்குது. சில இடங்களில் தெரிந்தாலும் பல இடங்களில் வெளியே தெரிவதில்லை, அப்படியே தெரிந்தாலும் ஜாதிய பின்புலத்தோட இருப்பதால அந்த பள்ளிகளையும், பள்ளி நடத்துறங்களையும் யாரும் எதிர்த்து கேள்வி கேட்குறது இல்ல. இதை சாதகமாக வச்சிக்கிட்டு காவி கொள்கையை தாராளமாக பள்ளி மாணவ, மாணவிகள் கிட்ட சொல்லிக் கொடுக்கிறாங்க. சமூக நீதி கருத்துகள் எல்லாம் சமூகத்துக்கு கேடான விஷயங்கள் போல அவங்க மனசுல பதிய வைக்கிறாங்க. கூடவே ஜாதி பெருமையையும் இந்த கூட்டங்களில் சொல்லிக்கொடுக்கப்படுது. 

ஊர் பக்கம் போனா கோயில் திருவிழா நடக்கும்போது நடத்தப்படும் நிகழ்ச்சிகளில் பெண்களிடம் ஜாதி பெருமை, காவி கொள்கையின் விஷக் கருத்துக்கள் இயல்பாக பரப்பிட்டு இருக்காங்க. வட மாவட்டம், தென் மாவட்டம், கொங்கு பகுதிகளில் எல்லாம் கடந்த 10 வருஷங்களாக மிகத்தீவிரமாக இது நடந்துட்டு வருது. அதனால் இளம் மாணவ, மாணவிகளிடம் கடந்த 10 வருஷத்துக்கு முன்னால இருந்த கொஞ்ச நஞ்ச சாதிய விழிப்புணர்வு, சமூகநீதி பற்றிய ஆழமான பார்வையெல்லாம் கடுகளவுக்குகூட இல்லாமல் போயிருக்கு. 

காவி கூட்டம் இதை சரியா பயன்படுத்திட்டு இருக்காங்க. ஈரோட்டு இயக்கம் இருக்கா, இல்லையான்னே தெரியல. பள்ளி, கல்லூரி மாணவர்கள் மத்தியில அப்படியொரு இயக்கம் இருக்கானு கேட்குற அளவுக்கு அந்த இயக்கத்தோட செயல்பாடு இருக்கு. கிராமம், நகரம், பள்ளி, கல்லூரி என ஒரு காலத்தில் தீவிரமாக பிரச்சாரம் செஞ்ச அந்த இயக்கம் இப்போ செயல்பாட்டு அளவுல மிகப்பெரிய அளவுல முடங்கியிருக்கிறதால, காவிக்கூட்டம் சொல்றதையெலாலம் நம்புற அளவுக்கு மக்களே தயாராகிட்டாங்க. ஆளும் தரப்புல இருக்கிற முக்கிய புள்ளிகளே கூட ஈரோட்டு இயக்க கருத்துகளை பேசுறதையே விட்டுட்டாங்க. 

அவங்களே காவிக்கூட்டங்களில் பங்கேற்பதோட, சாதிய கூட்டங்களில் கலந்து கொண்டு காவிக்கூட்டம் வளருவதற்கு உறுதுணையாவும் இருக்காங்க. இலைக்கட்சி ஏற்கனவே காவி வலையில் விழுந்து கரைஞ்சி, அவர்களின் பிரச்சார தூதுவர்களாக மாறிவிட்டது. அதே வழியில் தான் இப்போ இருக்கிற ஆளும்தரப்பும் போய்ட்டு இருக்கு. ஈரோட்டு இயக்கம் இப்படியே இருந்தா, அதுவும் கரைஞ்சி போக ரொம்ப நாள் எடுக்காது" என தன்னோட ஆதங்கத்த கொட்டி தீர்த்தார். அமைதியா கேட்டுக் கொண்ட குசும்பனுக்கு என்ன பதில் சொல்வது என தெரியவில்லை. அதனால், போனை கட்செய்துவிட்டு டீ மாஸ்டரிடம் "அண்ணே ஒரு முக்கியமான விஷயம் குறித்து ஒருத்தர் பேசியிருக்கிறார். அதைப் பத்தி  உங்ககிட்ட நாளைக்கு சொல்றேன்" என சொல்லிவிட்டு ஏதோ ஒரு யோசனையுடன் கிளம்பினான். 

மேலும் படிக்க | கிசுகிசு : இயக்குநர் அண்ணனை தம்பி மதிக்காததற்கு அந்தப்புர மேட்டர் தான் காரணமா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News