பட்டுச்சேலைகளுக்கு உலகப் பிரசித்தி பெற்ற காஞ்சிபுரத்தில் விளக்கொளி பெருமாள் கோயில் தோப்புத் தெருவில் வசிப்பவர்கள் குமரவேலு கலையரசி தம்பதியினர். பட்டுச்சேலை வடிவமைப்பு தொழில் செய்து வரும் இவர்கள், வாடிக்கையாளர்கள் விரும்பும் உருவங்களை பட்டு சேலையில் வடிவமைத்து கைத்தறியில் நெசவு செய்து தயாரித்துக் கொடுப்பதில் கைதேர்ந்தவர்கள்.
இவர்களிடம் சென்னையைச் சேர்ந்த வாடிக்கையாளர் ஒருவர், திருமலை திருப்பதியில் புரட்டாசி மாத பிரம்மோற்சவ விழாவில், பெருமாளுக்கு சமர்ப்பிக்க வித்தியாசமாகப் பட்டுச்சேலை தயாரித்து வழங்கக் கேட்டுக்கொண்டார். வாடிக்கையாளர் வேண்டுகோளின்படி பட்டுச்சேலையில் பெருமாளின் முகங்களையும், முந்தானையில் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் பெருமாள் லட்சுமி தேவியையும், வடிவமைத்து தர, டிசைனர் தம்பதியினர் முடிவெடுத்தனர். அதன்படி பெருமாளின் திருமுகம், அரங்கநாதர் லட்சுமி தேவியின் படத்தினை வடிவமைத்து இரவு பகலாக, கடந்த எட்டு தினங்களாக நான்கு நெசவாளர்கள் துணையுடன், 192 மணி நேரத்தில் பட்டுச்சேலையை நெசவு செய்து தயாரித்து உள்ளனர்.
அரக்கு கலர் கோறா பட்டில் தக்காளி கலர், தங்க ஜரிகை இழைகளால் நெசவு செய்து - 21 1/2 முழம் நீளத்தில், ஒரு கிலோ 386 கிராம் எடையில் நெசவு செய்துள்ள சேலையின் உடலில், 427 பெருமாளின் திருமுகங்களும், பார்ட்டரில் 27 ஜோடி யானைகளும் அமையுமாறு வடிவமைக்கப்பட்டுள்ளது. முந்தானையில் ஆதிசேஷன் மீது சயன கோலத்தில் படுத்திருக்கும் ரங்கநாதரும், காலடியில் வீற்றிருக்கும் மகாலட்சுமியும், நாபியில் இருந்து வளரும் தாமரைப் பூவில் பிரம்மாவும், ஸ்ரீரங்கம் ரங்கநாதரின் உற்சவர் உருவமும் ஜரிகை இழைகளால் நெய்து சேலையை தயாரித்து உள்ளனர்.
மேலும் படிக்க | கட்டிட தொழிலாளியின் மகள் மிஸ் தமிழ்நாடு பட்டம் வென்று சாதனை
திருமலையில் நடைபெறும் பிரம்மோற்சவத்தின் போது பெருமாளுக்கு வாடிக்கையாளரால் வழங்கப்படும் பட்டுச்சேலையை விரதம் இருந்து நெசவு செய்து வழங்கி உள்ளதாக பெரு மிதத்துடன் குமரவேலு கலையரசி தம்பதியினர் தெரிவித்துள்ளனர். தற்போது இவர்கள் வடிவமைத்திருக்கும் ஜொலிக்கும் பட்டுச்சேலையின் அழகிய உருவம் காஞ்சிபுரம் மட்டுமல்லாது ; தமிழகம் முழுக்க உள்ள பக்தர்களின் உள்ளத்தை வெகுவாக கவர்ந்துள்ளது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ