ஆண்கள் மட்டுமே தடம் பதித்த உடல் கட்டழகு போட்டியில் தங்கம் வென்ற சங்கீதா!

ஆண்கள் மட்டுமே தடம் பதித்து வந்த உடல் கட்டழகு போட்டியில் கூலி வேலை செய்யும்  சங்கீதா என்பவர் தங்கம் வென்று அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளார். 

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Jan 17, 2022, 12:55 PM IST
ஆண்கள் மட்டுமே தடம் பதித்த உடல் கட்டழகு போட்டியில் தங்கம் வென்ற சங்கீதா! title=

ஆண்கள் மட்டுமே தடம் பதித்து வந்த உடல் கட்டழகு போட்டியில் கூலி வேலை செய்து 2 பிள்ளைகளை படிக்க வைத்து கொண்டே தென்னிந்திய அளவிலான  போட்டியில் தங்கம் வென்று சங்கீதா என்பவர் அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளார்.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி  மேட்டுப்பாளையம் மாரியம்மன் கோவில் தெருவை  சேர்ந்தவர் சங்கீதா (வயது 35) சிறுவயதில் இருந்தே  நிறைய சாதிக்க வேண்டும் என்பது சங்கீதாவின் லட்சியம் குடும்ப சூழ்நிலை காரணமாக 10ஆம் வகுப்பு வரை மட்டுமே படித்துவிட்டு  பாண்டியன் என்பவரை திருமணம் செய்துகொண்டு வாழ்ந்து வந்தார். இவர்களுக்கு தினேஷ் குமார் 12ஆம் வகுப்பு படிக்கும் மகன் மற்றும் 10ஆம் வகுப்பு படிக்கும் நந்தினி என்ற மகள் உள்ளனர்.

கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு பாண்டியன் உடல்நலக் குறைவால் உயிரிழந்த நிலையில் சங்கீதா தொழிற்சாலைக்கு கூலி வேலைக்கு சென்று  2 பிள்ளைகளை காப்பாற்றி வருகிறார். மேலும் சாதிக்க வேண்டும் என்பதற்காக வாணியம்பாடி வாரச்சந்தை  அருகே உள்ள பாரத் உடற்பயிற்சி மையத்தில்  இணைந்து உடல் கட்ட அழகு போட்டியில் கலந்து கொள்வதற்காக தீவிர பயிற்சி மேற்கொண்டார். வறுமையின் காரணமாக அதுவும் பாதியிலேயே  நிறுத்தியுள்ளார்.

பாரத் உடற்பயிற்சி மையத்தின் பயிற்சியாளர் மற்றும் உரிமையாளருமான குமரவேல் சங்கீதாவை அழைத்து  உடற்பயிற்சி தொடர்ந்து மேற்கொள்ளுமாறும்  பயிற்சி கட்டணம் செலுத்த வேண்டாம் என்றும் விடா முயற்சியால் சாதிக்க முடியும் என்று சொல்லி தொடர் பயிற்சி அளித்து உதவியும் செய்து வந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த  2 ஆண்டுகளாக தீவிர பயிற்சி மேற்கொண்ட சங்கீதா மாவட்ட அளவிலான போட்டிகள் மற்றும் மாநில அளவிலான போட்டிகளில் தொடர்ந்து வெற்றி பெற்று பதக்கங்களை குவித்து வந்தார். இந்த ஆண்டிற்கான 2022 உடல் கட்டழகு போட்டி மற்றும் உடற் கட்டமைப்பு போட்டி கடந்த 2  நாட்களுக்கு முன்பு 11.01.2022 அன்று  தென்காசியில் நடைபெற்ற தென்னிந்திய அளவிலான  உடல் கட்டழகு மற்றும்  உடற் கட்டமைப்பு போட்டியில் கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, தமிழ்நாடு ஆகிய  மாநிலத்தை சேர்ந்த 8 பேர் கலந்து கொண்டுள்ளனர். இந்த போட்டியில் சங்கீதா கலந்துகொண்டு தென்னிந்திய அளவிலான மிஸ்டர் உடல் கட்டழகு மற்றும் உடற்கட்டமைப்பு போட்டியில் (MR. SOUTH INDIA CHAMPION) பட்டம் பெற்று தங்கப்பதக்கத்தை வென்றுள்ளார்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

 

Trending News