தமிழகத்தில் மாவட்ட வாரியாக இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு...

தேர்தல் இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிட்டார் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ; தமிழகத்தில் மொத்தம் 91 லட்சம் வாக்காளர்கள்.....

Last Updated : Jan 31, 2019, 01:12 PM IST
தமிழகத்தில் மாவட்ட வாரியாக இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு... title=

தேர்தல் இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிட்டார் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ; தமிழகத்தில் மொத்தம் 91 லட்சம் வாக்காளர்கள்.....

சென்னையில் மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன் வாக்களர் பட்டியலை வெளியிட்டார். அதன்படி 18 லட்சத்து 83 ஆயிரத்து 989 ஆண்வாக்காளர்களும் 19 லட்சத்து 34 ஆயிரத்து 78 பெண் வாக்காளர்களும் 932 இதர வாக்காளர்களும் என மொத்தம் 38 லட்சத்து 18 ஆயிரத்து 999 வாக்காளர்கள் சென்னையில் உள்ளனர்.

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் வினய் மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு தொகுதிக்குமான வாக்களர் பட்டியலை வெளியிட்டார். அதன்படி மாவட்டத்தில் மொத்தம் 8 லட்சத்து 66 ஆயிரத்து 715 ஆண்வாக்காளர்களும் 9 லட்சத்து ஆயிரத்து 984 பெண் வாக்காளர்களும் 154 இதர வாக்காளர்களும் என மொத்தம் 17 லட்சத்து 68 ஆயிரத்து 853 வாக்காளர்கள் உள்ளனர்.

நாகை மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இறுதி வாக்காளர் பட்டியலை மாவட்ட ஆட்சியர் சுரேஷ்குமார் இன்று வெளியிட்டார். அதன்படி மாவட்டத்தில் 6 லட்சத்து 25 ஆயிரத்து 719 ஆண் வாக்காளர்களும், 6 லட்சத்து 40 ஆயிரத்து 733 பெண் வாக்காளர்களும், 30 இதர வாக்காளர்களும் என மொத்தம் 12 லட்சத்து 66 ஆயிரத்து 482 வாக்காளர்கள் உள்ளனர்.

நெல்லை மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ் இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிட்டார். மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்றத் தொகுதிகளில் 12 லட்சத்து 48 ஆயிரத்து 485 ஆண் வாக்காளர்கள், 12 லட்சத்து 89 ஆயிரத்து 108 பெண் வாக்காளர்கள், 90 இதர வாக்காளர்கள் என மொத்தம் 25,37,683 வாக்காளர்கள் உள்ளனர்.

புதுச்சேரி மாநிலத்தில் வாக்காளர் பட்டியலை தலைமை தேர்தல் அதிகாரி கந்தவேலு வெளியிட்டார். அதன்படி 4 லட்சத்து 53ஆயிரத்து 153 ஆண் வாக்காளர்கள், 5 லட்சத்து 6 ஆயிரத்து 320 பெண் வாக்காளகள், 93 இதர வாக்காளர்கள் என மொத்தம் 9 லட்சத்து 59 ஆயிரத்து 566 வாக்காளர்கள் உள்ளனர். 

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளுக்கான இறுதி வாக்காளர் பட்டியலை மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் எம் வடநேரே இன்று வெளியிட்டார். அதன்படி மாவட்டத்தில் மொத்தம்  7,45,626 ஆண் வாக்காளர்கள், 7,31,387 பெண் வாக்காளர்கள், 148 இதர வாக்காளர்கள் என 14 லட்சத்து 77 ஆயிரத்து 161 உள்ளனர். 

சேலம் மாவட்டத்தில் 11 சட்டமன்ற தொகுதிகளுக்கான இறுதி வாக்காளர் பட்டியலை ஆட்சியர் ரோகிணி வெளியிட்டார். அதன்படி மாவட்டத்தில் மொத்தம் 14 லட்சத்து 31 ஆயிரத்து 687 ஆண்வாக்காளர்கள், 14 லட்சத்து 30 ஆயிரத்து 76 பெண் வாக்காளர்கள் 118 இதர வாக்காளர்கள் உட்பட 28 லட்சத்து 61 ஆயிரத்து 881 வாக்காளர்கள் உள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டத்தில் 6 தொகுதிகளுக்கான இறுதி வாக்காளர் பட்டியலை ஆட்சியர் சந்தீப் நந்தூரி வெளியிட்டார். அதன்படி மாவட்டத்தில் மொத்தம் 6 லட்சத்து 90 ஆயிரத்து 106 ஆண் வாக்காளர்களும், 7 லட்சத்து 12 ஆயிரத்து 98 பெண் வாக்காளர்களும் 96 திருநங்கைகளும் என மொத்தம் 14 லட்சத்து 2 ஆயிரத்து 300 வாக்காளர்கள் உள்ளனர்.

கரூர் மாவட்டத்தில் உள்ள 4 தொகுதிகளுக்கான இறுதி வாக்காளர் பட்டியலை மாவட்ட ஆட்சியர் அன்பழகன் வெளியிட்டார். மாவட்டத்தில் மொத்தம் 4 லட்சத்து 12 ஆயிரத்து 303 ஆண் வாக்காளர்களும், 4 லட்சத்து 35 ஆயிரத்து 831 பெண் வாக்காளர்களும், 55 இதர வாக்காளர்களும் என 8 லட்சத்து 48 ஆயிரத்து 189 வாக்காளர்கள் உள்ளனர்.  

 

Trending News