சென்னை: திருமணம் செய்துகொள்வதாகக் கூறி 20 வயது பெண்ணை ஏமாற்றிய குற்றத்திற்காக வெள்ளிக்கிழமை இரண்டு பேரை போலீசார் தாம்பரம் (Tambaram) அருகே கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட நபர்கள் வடக்கு சென்னையைச் சேர்ந்த சுபின் பாபு (25) மற்றும் அவரது நண்பர் சுஜின் வெர்கீஸ் (27) என அடையாளம் காணப்பட்டுள்ளனர். சுமார் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு, சுபின் என்பவருக்கு பேஸ்புக்கில் (Facebook) ஒரு பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது. அப்போது அந்த பெண் ஒரு மைனராக இருந்தார்.
அதன் பிறகு திருமணம் செய்துகொள்வதாக வாக்குறுதியளித்து, அப்பெண்ணுடன் சுபின் பல முறை உடல் ரீதியான உறவைக் கொண்டிருந்தார் என தெரிய வந்துள்ளதாக போலீஸ் வட்டாரங்கள் கூறுகின்றன. இருவரும் ஒன்றாக இருந்த தருணங்களை வீடியோ எடுத்த சுபீன் அவற்றை தன் நண்பனான சுஜினிடம் காட்டியதாகவும் போலீசார் தெரிவித்தனர்.
சில வாரங்களுக்கு முன்பு, உறுதியளித்த படி தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு அந்தப் பெண் சுபினிடம் கேட்டுள்ளார். தொடர்ந்து இது குறித்து சுபினை அந்தப் பெண் வற்புறுத்தியுள்ளார். அந்தப் பெண்ணின் தொடர் நச்சரிப்புகளிலிருந்து விடுதலைப் பெற, சுபின், அவர் எடுத்த வீடியோக்களை பெண்ணிடம் காட்டியுள்ளார்.
ALSO READ: 20 நாட்களில் மூன்றாவது சம்பவம். உ.பி.யில் 3 வயது சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டு கொலை
தன்னை வற்புறுத்தினால், அந்த வீடியோக்கள் இணையத்தில் வெளியிடப்படும் என்று அவரது நண்பர்கள் பெண்ணை மிரட்டினர். இதைத் தொடர்ந்து, பெண், தாம்பரம் அனைத்து பெண்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அங்குள்ள அதிகாரிகள் விசாரணை நடத்தி இருவரையும் போக்ஸோ (POCSO) சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
இதுவரை இந்த நண்பர்கள் இணைந்து நான்குக்கும் மேற்பட்ட சிறுமிகளை ஏமாற்றியுள்ளதாகவும், இது தொடர்பான மேலதிக விசாரணைகள் நடந்து வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஃபேஸ்புக் போன்ற சமூக ஊடகங்கள் மூலம் இப்படிப்பட்ட பல ஏமாற்று வேலைகள் நடந்து வருவது குறித்து அவ்வப்போது பல செய்திகள் வந்துகொண்டிருக்கும் நிலையிலும், ஏமாறுபவர்கள் ஏமாறிக்கொண்டுதான் இருக்கிறார்கள். ஏமாற்றுபவர்கள் ஏமாற்றிக்கொண்டுதான் இருக்கிறார்கள்.
அனைத்து வித பொழுதுபோக்கு சாதனங்களுக்கும் ஒரு வரம்பு உண்டு என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். பொழுதுபோக்கு வாழ்க்கையாகாது. பொழுதுபோக்கு சாதனங்களில் நாம் விழிப்புணர்வுடன் இல்லாவிட்டால், வாழ்க்கை விவகாரமாகிவிடும் என்பதை அனைவரும் எப்போதும் நினைவில் கொள்ள வேண்டும்.
ALSO READ: 10 ஆண்டுகளில் 8 முதியவர்களை திருமணம் செய்த பெண்: ஒவ்வொரு முறையும் பணம், நகையுடன் மாயம்!!