தி.மலை: சொத்து தகராறில் தம்பியை சுட்டுக்கொன்ற முன்னாள் ராணுவ வீரர் மனைவியுடன் கைது!

திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அருகே சொத்து தகராறில் தம்பியை துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற ராணுவ வீரர் மற்றும் கொலைக்கு உடந்தையாக இருந்த அவரது மனைவியை போலீஸார் கைது செய்தனர். 

Written by - Arunachalam Parthiban | Last Updated : May 17, 2022, 07:52 PM IST
  • அண்ணன் தம்பிக்கு இடையே சொத்து தகராறு
  • தம்பியை சுட்டுக்கொன்ற அண்ணன் கைது
  • உடந்தையாக இருந்ததாக அண்ணன் மனைவியும் கைது
தி.மலை: சொத்து தகராறில் தம்பியை சுட்டுக்கொன்ற முன்னாள் ராணுவ வீரர் மனைவியுடன் கைது! title=

திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அடுத்த கரிப்பூர் கிராமத்தை சேர்ந்தவர் தேசிங்கு. விவசாயியான இவர் சில ஆண்டுகளுக்கு முன் உயிரிழந்துவிட்டார். இவருக்கு ஜெகதீஷ், கோதண்டராமன் எனும் இரண்டு மகன்களும் ஒரு மகளும் உள்ளனர். மூத்த மகன் ஜெகதீசன்(50) முன்னாள் ராணுவ வீரராவார். இவரது மனைவி சிவகாமி. இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். இரண்டாவது மகன்
கோதண்டராமனுக்கு(38) திருமணமாகவில்லை.

இதனிடையே தேசிங்குவுக்கு சொந்தமான 7 ஏக்கர் நிலம் தொடர்பாக அண்ணன், தம்பி இருவருக்கும் இடையே முன்விரோதம் இருந்துள்ளது. இதனால் தாய் தேவகியுடன் கோதண்டராமன் தேவிகாபுரத்தில் வசித்து வந்தார். கரிப்பூரில் உள்ள வீட்டுக்கு நேற்று கோதண்டராமன் சென்ற நிலையில் சொத்து தொடர்பாக அண்ணன் - தம்பிக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. 

பின்னர் இருவருக்கும் இடையே கைக்கலப்பு ஏற்பட்டதால் ஆத்திரத்தில் சொந்த தம்பி என்றும் பாராமல் கோதண்டராமனை ஜெகதீசன் துப்பாக்கியால் சுட்டுள்ளார். மார்பில் குண்டு பாய்ந்த கோதண்டராமன் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். 

மேலும் படிக்க | மகள் மீது தாய் புகார்! ஒரு கிலோ தங்கத்தை திருடி காதலனுடன் உல்லாசமாக சுற்றிய மகள்

தகவலறிந்து வந்த போலீசார் சடலத்தை மீட்க முயற்சி செய்தனர். ஆனால், இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த உறவினர்கள் ஜெகதீசனையும் கொலைக்கு உடந்தையாக இருந்த அவரது மனைவியையும் கைது செய்ய வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், அவர்களது சொத்துகளை பறிமுதல் செய்து தாய் தேவகியின் பெயரில் எழுத வேண்டும் எனவும், அதுவரை சடலத்தை எடுக்கக்கூடாது எனவும் எதிர்ப்பு தெரிவித்தனர். 

Gun Shot

இதனைத் தொடர்ந்து திருவண்ணாமலை டிஎஸ்பி குணசேகரன், வந்தவாசி டிஸ்பி விசுவேஸ்வரய்யா, செய்யாறு ஆர்டிஓ விஜயராஜ், சேத்துப்பட்டு தாசில்தார் கோவிந்தராஜி ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அவர்கள் உறுதியளித்ததன் பேரில் நள்ளிரவு 2.30 மணியளவில் சடலத்தை கொண்டு செல்ல உறவினர்கள் ஒப்புக்கொண்டனர். 
இதனால் கோதண்டராமனின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக போலீஸார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதனிடையே கொலை தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீஸார் ஜெகதீசன் மற்றும் அவரது மனைவியை தீவிரமாக தேடி வந்தனர். போளூரில் பதுங்கியிருந்த ஜெகதீசனை நேற்றிரவு கைது செய்த போலீஸார் அம்மாபாளையம் எனுமிடத்தில் உள்ள தாய் வீட்டில் இருந்த சிவகாமியையும் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அண்ணன் தம்பி இருவரும் சண்டை போடும்போது தடுக்காமல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்ததால் சிவகாமி கைது செய்யப்பட்டதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க | ஞானவாபி மசூதியில் சிவலிங்கம் கண்டறியப்பட்ட விவகாரம்; உச்ச நீதிமன்றத்தில் விசாரணை

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News