கர்நாடக மாநிலத்தில் சிவமோகா மாவட்டத்தில் லட்சக்கணக்கான தமிழர்கள் பல தலைமுறைகளாக வாழ்ந்து வருகின்றனர். சிவமோகா தமிழ் சங்கம் புலம்பெயர்ந்த கன்னட தமிழர்கள் இடையே பிரபலமான தமிழ் சங்கமாக திகழ்ந்து வருகிறது. இதனிடையே வரும் சட்டமன்றத் தேர்தலில் தமிழர்களின் ஆதரவை பெற சிவமோகா நகரில் தமிழர்களை வைத்து ஆதரவு பிரச்சார கூட்டம் பாஜக கட்சி சார்பில் நடத்தப்பட்டது. கூட்டத்திற்கு ஈஸ்வரப்பா தலைமை ஏற்ற நிலையில் சிறப்பு விருந்தினராக அண்ணாமலை கலந்து கொண்டார்.
மேலும் படிக்க | ஓடி ஒளிந்து கொள்பவர்தான் எடப்பாடி பழனிசாமி - அமைச்சர் மனோதங்கராஜ்!
கூட்டம் துவங்கியவுடன் அங்கிருந்த தமிழர்கள் முதலில் தமிழ் தாய் வாழ்த்தை ஒலிபெருக்கி மூலமாக இசைக்க வைத்தனர். தமிழ் தாய் வாழ்த்து பாடல் பாடிக்கொண்டிருந்த போது ஆயிரக்கணக்கான தமிழர்கள் எழுந்து நின்று அதற்கு மரியாதை செலுத்திக் கொண்டிருந்தனர். மேலும் மேடையில் இருந்த தலைவர்களும் எழுந்து நின்று மரியாதை செலுத்திக் கொண்டிருந்தனர். அப்போது, தமிழ் தாய் வாழ்த்து பாடல் பாடுவதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த முன்னாள் பாஜக அமைச்சர் ஈஸ்வரப்பா உடனடியாக குறுக்கிட்டு பாடி கொண்டிருந்த தமிழ்த்தாய் வாழ்த்தை பாதியில் நிறுத்த வைத்தார்.
— Sridharan K (@reportersridhar) April 27, 2023
பின்பு, பெண்கள் யாராவது இங்கு வந்து கன்னட நாட்டு கீதத்தை பாடும்படி அவர் வலியுறுத்தினார். இதனையடுத்து நிகழ்ச்சியை ஒருங்கிணைத்திருந்த தமிழர்கள் ஒலிபெருக்கி மூலமாக கன்னட நாட்டின் கீதத்தை பாட வைத்தனர். தேர்தல் களத்தில் தமிழர்கள் இடையே வாக்கு சேகரிக்க வந்த பாஜக கட்சித் தலைவர்கள், குறிப்பாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை முன்னிலையில் தமிழர்களை இழிவுபடுத்தும் விதமாகவும், தமிழ் தாயை இழிவுபடுத்தும் விதமாகவும் தமிழ் தாய் வாழ்த்து பாதியில் நிறுத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்திற்கு நாடு முழுவதிலும் உள்ள தமிழ் ஆர்வலர்கள் கடும் கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர்.
தமிழ்த்தாய் வாழ்த்தை இழிவுபடுத்தும் தனது கட்சிக்காரர்களைத் தடுக்க முடியாத திரு. அண்ணாமலை அவர்கள், தமிழ் மக்களைப் பற்றி எப்படி கவலைப் படுவார்.#ApologiseAnnamalai
— Kanimozhi (கனிமொழி) (@KanimozhiDMK) April 27, 2023
தூத்துக்குடி திமுக எம்பி கனிமொழியும் டிவிட்டரில் அண்ணாமலைக்கு இதுதொடர்பாக கண்டனம் தெரிவித்திருப்பதுடன், தமிழ்தாயை இழிவுபடுத்தியதற்காக மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
மேலும் படிக்க | கோழைத்தனமான பிளாக் மெயில் கும்பல்... அண்ணாமலை ஆடியோவுக்கு பிடிஆர் விளக்கம்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ