உச்ச நீதிமன்றத்தின் அறிவுறுத்தலின் படி அமமுகவுக்கு பொதுசின்னம் கிடைக்குமா?

அமமுக சார்பில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களுக்கும் ஒரு பொதுவான சின்னத்தை கிடைக்குமா?

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Mar 26, 2019, 01:02 PM IST
உச்ச நீதிமன்றத்தின் அறிவுறுத்தலின் படி அமமுகவுக்கு பொதுசின்னம் கிடைக்குமா? title=

மக்களவை தேர்தல் மற்றும் தமிழகத்தில் நடைபெற இருக்கும் இடைத்தேர்தலிலும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்துக்கு குக்கர் சின்னம் ஒதுக்கக்கோரி வழக்கில் இன்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. 

இந்த வழக்கில் ஆஜரான டி.டி.வி.தினகரன் தரப்புக்கும், தேர்தல் ஆணையத்துக்கும் இடையே காரசாரமாக கடும் விவாதம் நடைபெற்றது. அதில் தேர்தல் ஆணையம் தரப்பில் தற்போது வரை பதிவு செய்யாததால், அமமுக-வை சுயேட்சையாக தான் கருத முடியும். சுயேட்சை சின்னம் தான் ஒதுக்க முடியும். பதிவு செய்யப்படாத கட்சி என்பதால் அமமுகவுக்கு குக்கர் சின்னம் ஒதுக்க முடியாது. மேலும் இன்று கட்சியை பதிவு செய்தாலும் ஒரு மாதம் கழித்துதான் பொது சின்னத்தை ஒதுக்க முடியும் எனக் கூறியது. 

இதைக்கேட்ட நீதிபதிகள், குக்கர் சின்னம் ஒதுக்க முடியாது என்பதற்கான ஆதாரத்தை தேர்தல் ஆணையம் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் எனக் கூறியது. அதேபோல அதற்கான ஆதாரத்தை தேர்தல் ஆணையம் தாக்கல் செய்தது. 

இன்று மீண்டும் வழக்கு விசாரணைக்கு வந்தது.  அப்பொழுது இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள், சட்டத்தில் இடம் இல்லை என்பதால், அமமுகவுக்கு குக்கர் சின்னம் ஒதுக்க முடியாது. அதேவேளையில் தேர்தலில் போட்டியிடும் ஒரு கட்சிக்கு சின்னம் மிகவும் முக்கியம் என்பதால், அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்துக்கு பொதுச் சின்னத்தை வழங்குவது குறித்து தேர்தல் ஆணையம் பரிசீலிக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இந்தநிலையில், இன்றுடன் தமிழகம் மற்றும் புதுசேரியில் வேட்புமனு தாக்கல் முடிவடைய உள்ளதால், உச்ச நீதிமன்றத்தின் அறிவுறுத்தலின் படி, அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்துக்கு பொது சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்குமா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. 

அமமுக சார்பில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களுக்கும் ஒரு பொதுவான சின்னத்தை கிடைக்குமா? என்பது குறித்து தேர்தல் ஆணையம் தான் முடிவெடுக்கும். 

Trending News