இடைத்தேர்தல் பிரசாரம் ஓய்ந்தது; 19-ம் தேதி வாக்குப்பதிவு

00 மணியுடன் பிரச்சாரம் முடிந்தது.  நடந்து முடிந்த தமிழக 

Last Updated : Nov 17, 2016, 06:09 PM IST
இடைத்தேர்தல் பிரசாரம் ஓய்ந்தது; 19-ம் தேதி வாக்குப்பதிவு title=

தமிழகத்தில் தஞ்சை, அரவக்குறிச்சி , திருப்பரங்குன்றம் , மற்றும் புதுச்சேரியில் நெல்லித்தோப்பு தொகுதியில் இன்று மாலை 5:00 மணியுடன் பிரச்சாரம் முடிந்தது.  நடந்து முடிந்த தமிழக 

சட்டசபை தேர்தலில் அரவக்குறிச்சி, தஞ்சை ஆகிய தொகுதிகளில் ஓட்டுக்கு பணம் கொடுத்தல் மற்றும் பணப்புழக்கம் குற்றச்சாட்டு காரணமாக தேர்தல் நிறுத்தி வைக்கப்பட்டது. திருப்பரங்குன்றம் அதிமுக - எம்எல்ஏ சீனிவேல் மரணமடைந்தார். புதுச்சேரி நெல்லித்தோப்பு தொகுதியின் எம்எல்ஏ ஜான்குமார் பதவியை ராஜினாமா செய்தார். இந்த 4 தொகுதிகளுக்கும் வருகிற 19-ந்தேதி தேர்தல் நடக்கிறது. 

நெல்லித்தோப்பு தொகுதியில் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி போட்டியிடுகிறார்.

அரவக்குறிச்சி தொகுதியில் அதிமுக , திமுக , பாஜக ,  தேமுதிக , பாமக கட்சி வேட்பாளர்கள் உள்ளிட்ட மொத்தம் 39 பேர் களத்தில் உள்ளனர். 

தஞ்சை தொகுதியில் அதிமுக , திமுக , பாஜக ,  தேமுதிக , பாமக கட்சி வேட்பாளர்கள் உள்ளிட்ட 14 பேர் போட்டியிடுகிறார்கள். 

திருப்பரங்குன்றம் தொகுதியில் அதிமுக , திமுக , பாஜக ,  தேமுதிக , பாமக, நாம் தமிழர் கட்சி உள்பட 28 பேர் போட்டியிடுகின்றனர்.

இந்த தொகுதிகளின் அனல்பறக்கும் இறுதிக்கட்ட பிரச்சாரம் இன்று மாலை 5 மணியுடன் ஓய்ந்த. நாளை மறுநாள் வாக்குப்பதிவு காலை 7 மணி முதல் மாலை 5.30 மணி வரை நடைபெறுகிறது. ஓட்டு எண்ணிக்கை வரும் 22-ம் தேதி நடக்கிறது.

Trending News