Edappadi Palanisamy On AIADMK BJP Alliance: சென்னையில் இருந்து விமான மூலம் மதுரை வந்த அதிமுக பொதுச்செயலாளர், எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
நிதி அமைச்சரின் ஆடியோ
அப்போது அவர் கூறியதாவது,"சமீபத்தில் சமூக வலைதளங்களில் வரும் நிதி அமைச்சரின் ஆடியோ உண்மையானது தான். முப்பதாயிரம் கோடி ரூபாய் விவாகரத்தை நாங்கள் கவர்னரிடம் புகார் அளிப்போம். மத்திய அரசு இது குறித்து விசாரணை நடத்த வேண்டும்.
மேலும் இந்த ஆட்சியில் திமுக அரசு மக்களுக்கு நன்மை செய்யவில்லை. கொள்ளையடிப்பதை குறிக்கோளாக கொண்டுள்ளது. முதலமைச்சர் எதற்கெடுத்தாலும் அறிக்கை கொடுப்பவர், இந்த ஆடியோ குறித்து ஏன் அறிக்கை கொடுக்கவில்லை. 12 மணிநேர சட்ட மசோதாவை எதிர்க்கட்சியாக இருந்தபோது அவர்கள் எதிர்த்தனர். தற்போது அதை நிறைவேற்ற முயற்சிக்கிறார்கள். அதற்கு அவர்களின் கூட்டணிக் கட்சிகளே எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
மனிதன் மிஷின் அல்ல
இந்த அரசு முதலாளிகளுக்கு அடிமை சாசனம் எழுதிக் கொடுத்து விட்டது. ஒரு தொழிலாளியை எட்டு மணி நேரம் வேலை, 8 மணி நேர உறக்கம், எட்டு மணி நேரம் ஓய்வு என்று இருக்க வேண்டும். மனிதன் ஒன்றும் மிஷின் அல்ல என்றும் தெரிவித்தார்.
இதைத் தொடர்ந்து கொடநாடு கொலை வழக்கில் மர்மம் இருப்பது உண்மை. எங்கள் அரசு தான் அந்த வழக்கில் சம்பந்தப்பட்ட நபர்களை கைது செய்தது நடவடிக்கை எடுத்தது. ஆனால் அந்த பயங்கர செயல்களில் ஈடுபடும் நபர்களுக்கு ஜாமீன் கொடுத்தது அவர்களுக்காக வாதாடியது திமுக தான்.
ஒன்லி டெல்லி
பாஜகவுடன் கூட்டணி தொடர்கிறது. கூட்டணி குறித்து நாங்கள் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, தேசிய தலைவர் நட்டா போன்றவர்களிடம் தான் பேசுவோம். வேற யாரைப் பற்றியும் பேச வேண்டியது இல்லை.
இந்த பேட்டிக்கு முன்னதாக மதுரை மாவட்ட செயலாளர்கள் முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜு, ஆர்.பி. உதயகுமார், ராஜன் செல்லப்பா ஆகியோர் எடப்பாடி பழனிசாமிக்கு வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து மதுரை விமான நுழைவாயிலில் அமைக்கப்பட்டுள்ள வரவேற்பு மேடையில் பேசிய போது,"தேர்தல் ஆணையம் நம் தரப்பை அங்கீகரித்துள்ளது, அங்கீகரித்த முதல் நிகழ்ச்சியாக தற்போது மதுரை வந்துள்ளேன். மதுரை மண் அதிமுகவுக்கு ராசியான மண்" என்றார். தொடர்ந்து அதிமுக தொண்டர்கள் எடப்பாடி பழனிச்சாமி வரவேற்றனர். தொடர்ந்து சாலை மார்க்கமாக விருதுநகர் புறப்பட்டு சென்றார்.
மேலும் படிக்க | அதிமுகவில் மீண்டும் ஓபிஎஸ்? அவரு தாங்க முடிவு பண்ணணும் - செல்லு ராஜூ
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ