ஆட்சிக்கு வந்து 14 மாதங்கள்தான் ஆனால் 20,000 கோடி ஊழல் - பரபரப்பு கிளப்பும் பழனிசாமி

திமுக ஆட்சிக்கு வந்து 14 மாதங்களே ஆன சூழ்நிலையில் இதுவரை 20,000 கோடி ரூபாய் ஊழல் நடந்திருப்பதாக அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றஞ்சாட்டியுள்ளார்.

Written by - க. விக்ரம் | Last Updated : Aug 9, 2022, 02:56 PM IST
  • அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் ஆனார் எடப்பாடி பழனிசாமி
  • இன்று சேலத்திலிருந்து சென்னை திரும்பினார்,.
  • வரும் வழியில் அவருக்கு வரவேற்பு பலமாக இருந்தது
ஆட்சிக்கு வந்து 14 மாதங்கள்தான் ஆனால் 20,000 கோடி ஊழல் - பரபரப்பு கிளப்பும் பழனிசாமி title=

ஓபிஎஸ்ஸுடனான அதிகார ரேஸில் வென்ற எடப்பாடி பழனிசாமி அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக பதவியேற்றுக்கொண்டார். இதனையடுத்து சேலம் சென்ற அவர் அங்கிருந்து ஓமலூர் வழியாக சென்னை திரும்பினார். அவருக்கு தீவட்டிப்பட்டி பகுதியில் சேலம் புறநகர் மாவட்ட செயலாளர் இளங்கோவன், ஜெயலலிதா பேரவை செயலாளர் மணி எம்.எல்.ஏ. ஆகியோர் தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனையடுத்து அங்கு போடப்பட்டிருந்த மேடையில் பேசிய எடப்பாடி பழனிசாமி, “சேலம் மாவட்டம் அ.தி.மு.க.வுடைய கோட்டை. இன்றைக்கு தமிழ்நாட்டில் தி.மு.க அதிக இடங்களிலே வெற்றி பெற்று ஆட்சி அமைத்திருக்கலாம். ஆனால் சேலம் மாவட்டத்தில் 11 சட்டமன்றத் தொகுதிகளில் 10 தொகுதியில் வெற்றி பெற்றுள்ளோம். சேலம் மாவட்டத்தில் சாலை வசதி, குடிநீர் வசதி, தெரு விளக்கு வசதி, முதியோர் உதவித்தொகை, பட்டா வழங்குவது, கூட்டு குடிநீர் திட்ட மூலம் குடிநீர் வழங்குதல், மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் அனைத்தும் செய்து கொடுத்து அதிமுக நற்பெயரை பெற்றுள்ளது. ஏழைகள் வசிக்கும் பகுதியிலே அம்மா கிளினிக் ஏற்படுத்தி அந்த பகுதியில் உள்ள பொது மக்களுக்கு சிகிச்சைக்கு ஏற்பாடு செய்த அரசாங்கம் அம்மா அரசாங்கம். இதை பொறுத்துக் கொள்ள முடியாத ஸ்டாலின், அ.தி.மு.க கொண்டு வந்த ஒரே திட்டம் என்பதால் அந்த கிளினிக் மக்களிடம் அதிக அளவில் வரவேற்பு இருப்பதை எண்ணி கிளினிக்கை மூடி உள்ளார்.

அதிமுக அரசு தாலிக்கு தங்கம் திட்டத்தின் கீழ் ஏழைப் பெண்களுக்கு 1 பவுன் தங்க தாலி, 50 ஆயிரம் ரூபாய் தொடர்ந்து வழங்கியது. ஆனால் ஸ்டாலின் தலைமையில் இருக்கும் திமுக அரசுக்கு, ஏழை பெண்களுக்கு இந்த திட்டம் கிடைப்பதை கூட பொறுத்துக் கொள்ளமுடியவில்லை. ஒரு பவுன் 40 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையாவதாக கூறி அந்த திட்டத்தை கிடப்பில் போட்டுள்ளனர். அதேபோல் அரசு பள்ளியில் படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு இலவச மடிக்கணினி திட்டத்தை ஜெயலலிதா கொண்டு வந்தார். அதையும் நிறுத்திவிட்டனர்.

மேலும் படிக்க | இந்தியாவிலேயே இப்படி செய்வது மு.க.ஸ்டாலின் மட்டும் தான்! ஈபிஎஸ் சாடல்!

இந்த ஆட்சி மக்கள் விரோத ஆட்சி. முதலில் கருணாநிதி , அதன் பிறகு ஸ்டாலின், அதன் பிறகு உதயநிதி, அதன் பிறகு இன்பநிதி . இது என்ன அரச பரம்பரையா?. வேறு யாராவது முதல்-அமைச்சரானால் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். அப்படிப்பட்ட கட்சிதான் திமுக. அது கட்சி அல்ல, கார்ப்பரேட் கம்பெனி. குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் பதவியில் உள்ளனர். இந்த மக்கள் விரோத ஆட்சி விரைவில் வீட்டுக்கு போவது உறுதி. அனைத்து துறைகளிலும் கடந்த 14 மாத காலங்களில் தி.மு.க. ரூ. 20 ஆயிரம் கோடி ஊழல் செய்துள்ளது. எனவே இந்த ஆட்சியை அகற்றி விட்டு அம்மாவுடைய ஆட்சி மலர அனைவரும் அதிமுகவுக்கு ஆதரவு கொடுக்க வேண்டும்” என்றார்.

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News