சென்னை: அதிமுக துரோகம் செய்தது பாமக கூறினால், அவர்கள் தான் அதற்கு விளக்கம் அளிக்க வேண்டும். மேலும் பாமகவிற்கு அதிமுக என்ன துரோகம் செய்தது என்று மருத்துவர் ராமதாஸ் விளக்க வேண்டும். அவர்கள் பதில் சொன்னால் நாங்கள் அதற்கு பதில் சொல்கிறோம் என செய்தியாளர்கள் சந்திப்பில் முன்னாள் முதல்வரும், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும் எடப்பாடி பழனிசாமி (Edappadi K. Palaniswami) கேள்வி எழுப்பியுள்ளார்.
அதிமுக கூட்டணியில் இருந்து பாமக (PMK) வெளியேறிவிட்டதா என செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு, ஆமாம்.. அவர்களே தான் கூறினார்கள்... அதிமுக கூட்டணியில் இல்லை.. ஊராட்சி தேர்தலில் தனித்து போட்டியிடுகிறோம் என்று... தேர்தலுக்கு தேர்தல் கூட்டணி மாறுவது பாமகவின் வாடிக்கை என பாமகவை அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சனம் செய்தார்.
மேலும் ஆளும் கட்சியான திமுகவையும் கடுமையாக விமர்சனம் செய்தார். அதிமுகவை அரசியல் ரீதியாக எதிர்கொள்ள திராணியற்ற திமுக அரசு மக்களை திசை திருப்பும் வகையில் லஞ்ச ஒழிப்புத்துறை மூலம் முன்னாள் அதிமுக அமைச்சர்களின் வீடுகளில் ரெய்டு நடத்தி வருகிறது. இதுபோன்ற பழிவாங்கும் நடவடிக்கைகள் மூலம் அதிமுகவை அசைத்து விட முடியாது. இந்த வழக்குகளை சட்டரீதியாக சந்திப்போம் என அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும் சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமி கூறியுள்ளார்.
பாமக நிறுவனர் ராமதாஸ் உள்ளாட்சித் தேர்தலின்போதே கூட்டணி இல்லை என்று சொல்லி விட்டார். கூட்டணியில் என்ன துரோகம் செய்தார்கள் என்பதை அவர்தான் சொல்ல வேண்டும். பாமக மற்ற தொகுதிகளில் ஜெயிக்க மக்கள்தான் வாக்களித்திருக்க வேண்டும் என்று அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே.பழனிசாமி சேலத்தில் செய்தியாளர்களிடம் கூறினார்.
அதிமுக முன்னாள் அமைச்சர்கள் சேலம் மாவட்டம் ஓமலூரில் உள்ள அதிமுக புறநகர் மாவட்ட அலுவலகத்தில் கட்சியின் மூத்த நிர்வாகிகளுடன் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே.பழனிசாமி இன்று ஆலோசனை நடத்தினார். ஆலோசனைக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.
ALSO READ | பருவமழையை எதிர்கொள்வதில் திமுக அரசு தோல்வி: குற்றம் சுமத்தும் எடப்பாடி பழனிச்சாமி
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR