விநாயகரின் திருவருளால்‌ உலகில் அன்பும்‌, அமைதியும்‌ நிறையட்டும்‌ : EPS-OPS வாழ்த்து

நாடு முழுவதும் நாளை (செப்டம்பர்,10) விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட உள்ள நிலையில், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இபிஎஸ் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Sep 9, 2021, 12:38 PM IST
விநாயகரின் திருவருளால்‌ உலகில் அன்பும்‌, அமைதியும்‌ நிறையட்டும்‌ : EPS-OPS வாழ்த்து title=

நாடு முழுவதும் நாளை (செப்டம்பர்,10) விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட உள்ள நிலையில், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இபிஎஸ் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- வினை தீர்க்கும்‌ தெய்வமாம்‌ விநாயகப்‌ பெருமான்‌ அவதரித்த திருநாளான ‘விநாயகர்‌ சதுர்த்தி’ திருநாளை பக்தியுடனும்‌. மகிழ்ச்சியுடனும்‌ கொண்டாடும்‌ மக்கள்‌ அனைவருக்கும்‌ எங்களது உளம் கனிந்த விநாயகர்‌ சதுர்த்தி நல்வாழ்த்துகளைத்‌ தெரிவித்துக்‌ கொள்கிறோம்‌.

மக்கள்‌ நல்ல காரியங்களைத்‌ தொடங்கும்‌ போது, தங்குதடையின்றி சிறப்புடன்‌ நடைபெற விநாயகப்‌ பெருமானை முதலில்‌ போற்றி வணங்குவர்‌. விநாயகரைத்‌ துதித்து நற்காரியங்களை மேற்கொண்டால்‌ வெற்றியே விளையும்‌ என்பது மக்களின்‌ ஏகோபித்த நம்பிக்கையாகும்‌. முழு முதற்‌ கடவுளாம்‌ விநாயகப்‌ பெருமானின்‌ அவதாரத்‌ திருநாளாம்‌ விநாயகர்‌ சதூர்த்தி அன்று, களி மண்ணால்‌ செய்யப்பட்ட பிள்ளையாருக்கு எருக்கம்‌ பூ மாலை அணிவித்து, அவருக்குப்‌ பிடித்தமான சுண்டல்‌, கொழுக்கட்டை, அப்பம்‌, அவல்‌, பொரி, பழங்கள்‌, கரும்பு போன்ற பொருட்களைப்‌ படைத்து, அறுகம்‌ புல்‌, மல்லி, செம்பருத்தி, அரளி போன்ற மலர்களால்‌ அர்ச்சனை செய்து விநாயகப்‌ பெருமானை மக்கள்‌ பக்தியுடன்‌ வழிபடுவார்கள்‌.

ALSO READ | விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட்டம்: கட்டுப்பாடுகளை விதித்தது சென்னை காவல்துறை

 

ஞானமே வடிவான திருமேனியைக்‌ கொண்ட விநாயகப்‌ பெருமானின்‌ திருவருளால்‌ உலகெங்கும்‌ அன்பும்‌, அமைதியும்‌ நிறையட்டும்‌ என்றும் நாடெங்கும்‌ நலமும்‌ வளமும்‌ பெருகட்டும்‌; வீடெங்கும்‌ மகிழ்ச்சியும்‌, மன நிம்மதியும்‌ தவழட்டும்‌ என்று வாழ்த்தி, விநாயகர்‌ சதுர்த்தித்‌ திருநாளை விமரிசையாகக்‌ கொண்டாடும்‌ மக்கள்‌ அனைவருக்கும்‌ புரட்சித்‌ தலைவர்‌ எம்‌.ஜி.ஆர்‌. புரட்சித்‌ தலைவி அம்மா ஆகியோரது வழியில்‌ ‘விநாயகர்‌ சதுர்த்தி” நல்வாழ்த்துகளை மீண்டும்‌ ஒருமுறை அன்போடு உரித்தாக்கிக்‌ கொள்கிறோம்‌ என தெரிவித்துள்ளார்.

ALSO READ: விநாயகர் சதுர்த்தி ஊர்வலங்களுக்கு தடை - முதலமைச்சர் விளக்கம்!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News