ஸ்டாலினிடம் இருந்து விலகியிருக்கும் துரைமுருகன் - அதிருப்திக்கு என்ன காரணம்?

திமுகவின் பொதுச்செயலாளரான துரைமுருகன் சமீப காலமாக கட்சி தலைமை மீது கடும் அதிருப்தியில் இருக்கிறாராம். இதனால் முதலமைச்சருடன் எந்த கூட்டங்களுக்கும் செல்லாத அவர், கட்சிப் பணிகளிலும் ஆர்வம் காட்டாமல் இருக்கிறாராம்.  

Written by - S.Karthikeyan | Last Updated : Jul 11, 2023, 02:31 PM IST
  • ஸ்டாலின் மீது துரைமுருகன் அதிருப்தி
  • அதிருப்திக்கான காரணம் என்ன?
  • உடன்பிறப்புகள் கிசுகிசுப்பது இதுதான்
ஸ்டாலினிடம் இருந்து விலகியிருக்கும் துரைமுருகன் - அதிருப்திக்கு என்ன காரணம்? title=

திமுகவின் இப்போதைய மூத்த தலைவர்களில் முன்னணி லிஸ்டில் இருக்கும் துரைமுருகன் அண்மைக்காலமாக கட்சி தலைமை மீது கடும் அதிருப்தியில் இருக்கிறாராம். கட்சி மற்றும் ஆட்சி உள்ளிட்ட முக்கிய கூட்டங்களுக்கு கூட முதலைமச்சர் மு.க.ஸ்டாலினுடன் செல்லாமல் அவர் தவிர்த்து வருவது வெளிப்படையாக தெரிந்துவிட்டதால், இதன் பின்னணி என்ன என்பது குறித்து அரசியல் வட்டாரத்தில் பலமாக கிசுகிசுக்கப்படுகிறது. திமுக வட்டாரத்தில் பேசும்போது, திமுக ஆட்சிக்கு வந்ததும் பசையான துறைகள் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இருந்தார் சீனியரான துரைமுருகன். ஆனால், நீர்வளம் மற்றும் கனிம வளத்தை மட்டும் கொடுத்து ஆப் செய்துவிட்டனர். இதில் இருந்தே அமைச்சர் துரைமுருகனின் அப்செட் தொடங்கிவிட்டதாம்.

மேலும் படிக்க | பாமக நிர்வாகி படுகொலை! தமிழகத்தில் நடந்த அதிர்ச்சி சம்பவம்!

பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் உள்ளிட்டோர் அமைச்சரவையில் இருந்து மாற்றப்படுவதாக தகவல் வருகிறதே என செய்தியாளர்கள் துரைமுருகனிடம் கேட்டபோதுகூட, இதைப் பற்றி எனக்கு எதுவும் தெரியாது, நீங்கள் சொல்லி தான் எனக்கே தெரியும் என்று தனக்கே உரிய பாணியில் நக்கலாக பதிலளித்தார். மேலும் உங்களுக்கு கூடுதலாக துறைகள் ஏதும் ஒதுக்கீடு செய்யப்படுகிறதா? என்ற கேள்விக்கு கொடுத்தால் வேண்டாம் என்ற சொல்லப்போகிறேன், இதைப் பற்றி சித்தரஞ்சன் சாலையில் சென்று கேளுங்கள் என தன்னுடைய விருப்பத்தை உள்குத்தாக வைத்து அந்த பேச்சை முடித்துக் கொண்டார். 

நல்ல துறைகள் வேண்டும் என்ற ஆசையில் இருந்தபோது, அது கிடைக்காமல் அதிருப்தியில் இருந்த துரைமுருகன், தன்னுடைய துறையில் தான் கேட்கும் அதிகாரிகள் நியமிக்கப்படுவதில்லை என்ற வருத்தமும் சேர்ந்து கொள்ள அந்த அதிருப்தி இரண்டு மடங்காக மாறிவிட்டதாம். இதனால் முன்புபோல் முதலமைச்சருடன் வெளியில் எங்கும் செல்லாமல் தனி பிரயத்தனமாகவே இருக்கிறார்.

செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்ட பிறகு கூட ஒட்டுமொத்த திமுகவே வெகுண்டெழுந்தபோதும் துரைமுருகன் பெரிதாக எந்த ரியாக்ஷனும் கொடுக்கவில்லை. மேலும், மருத்துவமனையில் சென்று அமைச்சர்கள் செந்தில் பாலாஜியை சந்தித்தபோதும் இவர் செல்லவில்லை. இது குறித்து பத்திரிக்கையாளர்கள் அவரிடம் கேட்டபோது, எப்பா என் டிப்பார்ட்மெண்ட பற்றி மட்டும் கேளுங்க என்று சொல்லிவிட்டார். அனைத்து கட்சி கூட்டம் பற்றியும் துரைமுருகன் எதுவும் கூறவில்லை. தொடர்ச்சியாக ஒவ்வொரு பேட்டியிலும் தன்னுடைய அதிருப்தி மனநிலையை சைலண்டாக காட்டி வரும் துரைமுருகனின் தேவை என்ன என்பது முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றாகவே தெரியுமாம். ஆனாலும், இந்த விவகாரத்தில் அவர் சைலண்டாக இருப்பது சீனியரான துரைமுருகனுக்கு பிடிக்கவில்லை. 

நாடாளுமன்ற தேர்தல் இப்போது நெருங்கிக் கொண்டிருப்பதால் விரைவில் தன்னை அழைத்து தலைவர் ஸ்டாலின் பேசுவார், அப்போது விரிவாக பேசிக் கொள்ளலாம் என்ற எண்ணத்தில் இப்போது துரைமுருகன் இருக்கிறாராம். மேலும், கூட்டணி விவகாரத்தில் பாமகவை திமுக கூட்டணிக்குள் கொண்டுவர துரைமுருகன் விரும்புவதற்கும் தலைமையிடம் இருந்து இன்னும் கிரீன் சிக்னல் கிடைக்கவில்லையாம். ஆனால், இது ரொம்ப நாளைக்கு எல்லாம் இருக்காது, சீக்கிரம் தலைவரும், பொதுச்செயலாளரும் அமர்ந்து பேசி பழைய பார்முக்கு வந்துவிடுவார்கள். இதுமாதிரி பலமுறை நடந்திருக்கிறது என்று கட்சி உடன்பிறப்புகளே கிசுகிசுத்துக் கொள்கிறார்கள். 

மேலும் படிக்க | திடீரென வீசப்பட்ட பெட்ரோல் வெடிகுண்டு... உயர் தப்பிய திமுக எம்எல்ஏ - கடலூரில் பரபரப்பு!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News