தேட தேட தங்க பார்சல்கள் ; மிரண்டு போன அதிகாரிகள் - விமானத்திற்குள் தங்க வேட்டை!

துபாயிலிருந்து சென்னைக்கு வந்த விமானத்தில் எங்கு தேடினாலும் தங்க பைகள். மிரண்டு போன அதிகாரிகளின் கையில் சிக்கிய எத்தனை கிலோ கட்டிகள்...

Written by - Gowtham Natarajan | Last Updated : Jun 4, 2022, 04:50 PM IST
  • கிலோ கணக்கில் சிக்கிய தங்க கட்டிகள்
  • கடத்தலில் ஈடுபட்டவர்கள் ஒருவர் கூட சிக்கவில்லை
  • கதி கலங்க வைக்கும் தங்க கடத்தல்
தேட தேட தங்க பார்சல்கள் ; மிரண்டு போன அதிகாரிகள் - விமானத்திற்குள் தங்க வேட்டை! title=

துபாயில் இருந்து பெரிய அளவில் விமானம் மூலம் சென்னைக்கு தங்கம் கடத்தி வரப்படுவதாக சென்னை விமான நிலைய சுங்க அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து சுங்க அதிகாரிகள் துபாயில் இருந்து வரும் அனைத்து விமான பயணிகளையும்  தீவிரமாக கண்காணித்து சோதனை நடத்தினர். இந்த நிலையில் துபாயிலிருந்து வந்திருந்த  இண்டிகோ ஏர்லைன்ஸ் விமான பயணிகளை தீவிரமாக சோதித்தனர். ஆனால் யாரிடமும் எந்த தங்கமும் சிக்கவில்லை. 

இதையடுத்து விரக்தியடைந்த சுங்க அதிகாரிகள் விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகளிடம் அனுமதி பெற்று  துபாயிலிருந்து வந்திருந்த இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானத்திற்குள் ஏறி சோதனையிட்டனர். 

gold smuggling,chennai airport,Indigo Airlines,Dubai,Customs

அப்போது விமானத்தின் கழிவறைகளுக்குள் உள்ள தண்ணீர் தொட்டிகள், மற்றும் விமானத்தில் பயணிகள் அமரும் இருக்கைகள் சீட்டுக்கு அடியில் மறைத்து வைத்திருந்த பாா்சல்களை  கண்டுபிடிக்கப்பட்டது. அனைத்து பாா்சல்களையும் சுங்க அதிகாரிகள் பறிமுதல் செய்து பாா்சல்களை பிரித்து பார்த்தனர். அவைகளில் தங்கப்பசைகள், கட்டிகள் இருந்தன. 

gold smuggling,chennai airport,Indigo Airlines,Dubai,Customs

அதேபோல் சென்னை விமான நிலையத்தின் பயணிகள் வருகை பகுதியில் உள்ள கழிவறைகள் மற்றும் குப்பை தொட்டிகளில் சோதனை நடத்தினர். அங்கும்  மறைத்து வைக்கப்பட்டிருந்த பாா்சல்களை பறிமுதல் செய்தனா். அவைகளிலும்  தங்கப்பசைகள், கட்டிகள் மறைத்து வைக்கப்பட்டிருந்தன.

இதேபோல் விமானத்திலும் விமான நிலையத்தின் பயணிகள் வருகை பகுதிகளிலும்  மொத்தம் 60 பார்சல்களை கைப்பற்றினர். இந்த 60 பார்சல்களில் 9.02 கிலோ எடையுள்ள தங்கக் கட்டிகள்,பசைகள் இருந்தன. அதன் சர்வதேச மதிப்பு ரூபாய் 4.5 கோடி ஆகும். 

gold smuggling,chennai airport,Indigo Airlines,Dubai,Customs

இதையடுத்து சிக்கிய தங்கத்தை சுங்க அதிகாரிகள் பறிமுதல் செய்து, வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். அதோடு விமானத்தில் உள்ள சிசிடிவி கேமரா மற்றும் விமான நிலைய வருகை பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்கள்  காட்சிகள் ஆகியவற்றிலும் ஆய்வு செய்து வருகின்றனர்.

மேலும் படிக்க | வயிற்றில் விழுங்கி போதை மாத்திரை கடத்தல் - கோவையில் சிக்கிய உகாண்டா பெண்..!

ஒரே நாளில் ஒரே விமானத்தில் 4.5 கோடி மதிப்புடைய 9.02 தங்க கிலோ தங்கத்தை கடத்தி வந்த கடத்தல் ஆசாமிகள் ஒருவர் கூட சுங்கத் துறையிடம் சிக்காமல் தப்பி ஓடியது சென்னை விமான நிலையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க | ஷார்ஜா வழியாக லேப்டாப்பில் கடத்தப்பட்டு திருச்சி வந்த தங்கம்: சுங்கத்துறை வீடியோ இதோ

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYe

 

Trending News