தமிழகம், புதுவையில் 2 நாட்களுக்கு வறண்ட வானிலை!

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 2 நாள்களுக்கு வறண்ட வானிலையே தொடரும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. 

Last Updated : Jan 17, 2019, 01:13 PM IST
தமிழகம், புதுவையில் 2  நாட்களுக்கு வறண்ட வானிலை! title=

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 2 நாள்களுக்கு வறண்ட வானிலையே தொடரும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. 

நீலகிரி மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் அடுத்த 48 மணிநேரத்திற்கு உறைபனி தொடரும் எனவும் தமிழகத்தின் உள்மாவட்டங்களில் மூடுபனி நிலவும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் பரவலாக பனிப்பொழிவு இருந்து வருகிறது. அதிகாலை நேரத்தில் சற்று அதிகமாகவே காணப்படுகிறது.

இந்நிலையில் தமிழகம், புதுச்சேரியில் வறண்ட வானி லையே நிலவும். நீலகிரி மாவட்டத்தின் மலைத்தொடர் களில் அடுத்த இரண்டு நாள் இர வில் உறைபனி நிலவும். மேலும் சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் அதிகாலை நேரங்களில் பனிமூட்டம் இருக்கும் எனவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Trending News