நாட்டின் தேசதந்தை மகாத்மா காந்தியின் 75வது நினைவு நாள் இன்று இந்தியா முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. தமிழகத்திலும் சென்னை மெரினா கடற்கரை பகுதியில் இருக்கும் மகாத்மா காந்தியின் திருவுருவச்சிலைக்கு ஆளுநர் மற்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
ALSO READ | ஆளுநர் Vs ஸ்டாலின்: மோதலுக்கு பிறகு முதல் சந்திப்பு
கோவை சிவானந்தா காலனி பகுதியில் ஒற்றுமை மேடை அமைப்பின் சார்பில் மகாத்மா காந்தி நினைவுநாள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. மார்க்சிஸ்ட் கட்சியின் முன்னாள் மாநில தலைவர் ஜி.ராமகிருஷ்ணன் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர். அப்போது, அங்கு சென்ற காவல்துறையினர் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சிக்கு காவல்துறை அனுமதி வாங்கவில்லை எனக் கூறி, உறுதிமொழி ஏற்புக்கு அனுமதி மறுத்தனர். இதனால், காவல்துறையினருக்கும், நிகழ்ச்சி அமைப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
ALSO READ | 5 நிமிடத்தில் தேர்தல் பிரச்சாரத்தை நிறுத்திய அமித்ஷா..!
மேலும், உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சிக்காக வைக்கப்பட்ட பேனரில் இடம்பெற்றிருந்த ‘இந்து மதவெறியர்களால் கொல்லப்பட்ட’ என்ற வாசகத்தை அகற்றுமாறு உத்தரவிட்டனர். அந்த வாசகம் மறைக்கப்பட்ட பிறகு உறுதிமொழி ஏற்பு நிகழ்வு நடைபெற்றது. அப்போது, உறுதிமொழியில் இடம்பெற்றிருந்த "கொலைகாரன் கோட்சே" பெயரையும், இந்து மதவெறி என்ற வார்த்தையும் பயன்படுத்த காவல்துறை எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதனால், காவல்துறையினருடன் ஜி.ராமகிருஷ்ணன் உள்ளிட்டோர் மீண்டும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
காந்தியை சுட்டாரா கோட்சே? கொந்தளித்த கோவை போலீஸ்#ZeeTamilNews | #Gandhi | #MahatmaGandhiji | #Gandhiji | #coimbatore pic.twitter.com/3jMF1xznSQ
— Zee Tamil News (@ZeeTamilNews) January 30, 2022
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஜி.ராமகிருஷ்ணன், எந்த ஒரு மதத்தையும் சுட்டிக்காட்டவில்லை, நடந்ததை கூறியதாக தெரிவித்தார். காந்தியை சுட்டுக்கொன்ற கோட்சேவை சிலர் புகழ்வது வருத்தமளிப்பதாகவும் தெரிவித்தார்.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR