cricketer நடராஜனின் அம்மா; சின்னப்பம்பட்டி உழைக்கும் கரங்கள்

தமிழக கிரிக்கெட் வீரர் நடராஜனின் அம்மா; சின்னப்பம்பட்டியில் கடை வைத்திருக்கும் அம்மா, உழைக்கும் கரங்களுக்கு சொந்தக்காரர்

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Dec 10, 2020, 07:57 PM IST
  • தமிழக வீரர் நடராஜன் கடந்த வாரம் தான் சர்வதேச போட்டிகளில் விளையாடத் தொடங்கினார்
  • ஒரு வாரத்திலேயே உலகையே திரும்பி பார்க்க செய்தார் நடராஜன்
  • எளிய குடும்பத்தில் பிறந்து பெரிய சாதனைகளை சாதிக்கும் நடராஜன்
cricketer நடராஜனின் அம்மா; சின்னப்பம்பட்டி உழைக்கும் கரங்கள் title=

புதுடெல்லி: தமிழக கிரிக்கெட் வீரர் தங்கராசு நடராஜன் சர்வதேச போட்டிகளில் களமிறங்கி, அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார். அவர் பங்கேற்ற முதல் சர்வதேச போட்டியிலேயே அதிரடியாக பந்து வீசி அபார வெற்றியை முத்திரையாக பதித்தார்.

நடராஜனுக்கு (T.Natarajan) பல்வேறு தரப்பினர் மட்டுமல்ல, சர்வதேச கிரிக்கெட் வீரர்களும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். நடராஜன் மைதானத்தில் அமைதியாக தென்பட்டாலும், ஆட்டம் என்று வந்துவிட்டால் அதிரடி பந்து வீச்சுக்களால் அனைவரையும் அசர வைப்பார். இடது கை வேகப் பந்துவீச்சாளர் நடராஜன் யார்க்கர் மற்றும் கட்டர் வகை பந்துவீச்சில் சிறந்தவர்.  

தற்போது ஆஸ்திரேலியாவில் சர்வதேச போட்டிகளில் கலந்துக் கொள்வதற்காக சென்றிருக்கும் நடராஜன், சிட்னியில் எடுத்த புகைப்படங்களை தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார். குக்கிராமம் ஒன்றில் பிறந்து, எளிய குடும்பத்தில் வளர்ந்து வெளிநாட்டில் சென்று முத்திரைப் பதித்திருக்கிறார் நடராஜன்.

நடராஜன் தமிழகத்தின் (Tamil Nadu) சேலம் மாவட்டத்தில் சின்னப்பம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர். அவரது பெற்றோர் சில்லி சிக்கன் கடை வைத்துள்ளனர். தாய் சாந்தாவும், தந்தை தங்கராஜும் சில்லி சிக்கன் கடையை நடத்தி வருகின்றனர். 

மகன் சர்வதேச போட்டிகளில் விளையாடி உலகத்தின் கவனத்தையே ஈர்த்திருக்கும் நிலையில், இன்னும் பெற்றோர் ஏன் சாலையோரத்தில் கடையை (business) நடத்த வேண்டும்?

இந்த கேள்விக்கு பதிலளிக்கும் தாய் சாந்தா, “பல ஆண்டுகளுக்கு முன்னரே நான் குடும்பத்தை பார்த்துக் கொள்கிறேன், நீங்கள் ஓய்வெடுங்கள் என்று மகன் நடராஜன் சொல்லிவிட்டான். ஆனால், வீட்டில் சும்மா உட்கார்ந்து என்ன செய்வது? இங்கு வந்தால், அனைவரையும் பார்த்து பழகி, நிம்மதியாக இருக்கிறோம். எங்களால் முடியும்வரை வேலை செய்கிறோம். இன்னும் இரண்டு மகள்களுக்கு திருமணம் செய்ய வேண்டும். அதன்பிறகு கடையை பற்றி யோசித்தால் போதும் என்று சொல்லிவிட்டோம்” என்று சொல்கிறார்.

சாதாரண குடும்பத்தில் பிறந்து, இன்று தனது தனித் திறமையால் வெற்றிக்கொடி நாட்டும் நடராஜனின் பெருமை உலகிற்கு தெரியத் தொடங்கியுள்ளது. இது வெறும் டிரெய்லர் தான் இன்னும் போகப்போக உலக அளவில் தனி இடம் பிடிக்கும் வீரர் என்ற பெயரைப் பெறுவார் எளிய குடும்பத்தில் பிறந்து பெரிய அளவில் மாபெரும் சாதனைகளை செய்யப்போகும் தங்கராசு நடராஜன். 

Also Read | தனது முதல் T20-ல் கலக்கிய தமிழக வீரர் நடராஜன்

தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR 

Trending News