TASMAC கடைகளை திறக்கும் அதிமுக அரசுக்கு எதிராக முழக்கமிட வேண்டும் என கட்சி தொண்டர்களிடன் திமுக இளைஞரணி தலைவர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது., "ஊரடங்கிலும் டாஸ்மாக் கடைகளைத் திறப்பதைக் கண்டித்து, தலைவர் @mkstalin அவர்களின் உத்தரவின்படி அனைத்து மாவட்டங்களிலும் இளைஞரணியினர் கருப்புச் சின்னம் அணிந்து தங்களின் வீட்டின் முன்பு நின்று கொரோனா ஒழிப்பில் தோல்வி அடைந்த அதிமுக அரசுக்கு எதிராக முழக்கமிட வேண்டும்!" என குறிப்பிட்டுள்ளார்.
கோவிட் -19 பூட்டுதல் காரணமாக இதுவரை நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மதுபானக் கடைகளை மீண்டும் தொடங்கலாம் என்று ஆந்திரா, தெலுங்கானா மற்றும் கர்நாடக அரசுகள் அறிவித்த சில நாட்களுக்குப் பிறகு, தமிழகம் அறிவித்தது, கட்டுப்பாட்டு மண்டலங்களில் உள்ளவை தவிர, மாநிலம் முழுவதும் மதுபானக் கடைகள் மே 7 அன்று மீண்டும் திறக்கப்படும் என அரசு தெரிவித்துள்ளது.
ஊரடங்கிலும் டாஸ்மாக் கடைகளைத் திறப்பதைக் கண்டித்து, தலைவர் @mkstalin அவர்களின் உத்தரவின்படி அனைத்து மாவட்டங்களிலும் இளைஞரணியினர் கருப்புச் சின்னம் அணிந்து தங்களின் வீட்டின் முன்பு நின்று கொரோனா ஒழிப்பில் தோல்வி அடைந்த அதிமுக அரசுக்கு எதிராக முழக்கமிட வேண்டும்! @dmk_youthwing pic.twitter.com/UipzdpYMUk
— Udhay (@Udhaystalin) May 6, 2020
தமிழகம் மாநில கருவூலத்தின் முக்கிய வருவாய் ஆதாரமாக விளங்கும் தமிழ்நாடு மாநில சந்தைப்படுத்தல் கழகம் (டாஸ்மாக்) மூலம் மது விற்பனையில் ஏகபோக உரிமையை பெற்றுள்ளது. இந்த அறிவிப்புக்கு ஒரு நாள் கழித்து, கிரேட்டர் சென்னை கார்ப்பரேஷன் (GCC) அதன் வரம்புக்குட்பட்ட டாஸ்மாக் கடைகள் திறக்கப்படாது என ஒரு அறிவிப்பை வெளியிட்டது,
எனினும் தமிழக அரசின் அறிவிப்பை கண்டித்து திமுக தலைவர் முக ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்பில்., மே 7-ம் தேதி டாஸ்மாக் கடைகளை திறப்பது என்று அரசு முடிவு செய்துள்ளது. இதனால் சமூக தொற்று மேலும் பரவலாகும் வாய்ப்பே அதிகம் என்பதால் அரசின் இச்செயலை வன்மையாக கண்டிக்கிறோம். மதுக்கடைகளை திறக்க ஆர்வம் காட்டும் அரசுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் மக்கள் கருப்பு சின்னம் அணிந்து நாளை காலை 10 மணிக்கு அவரவர் வீட்டு வாசலில் நின்று 15 நிமிடம் முழக்கமிடுங்கள். திமுக கூட்டணிக் கட்சிகள் முன்னெடுக்கும் இந்த போராட்டத்தில் தமிழக மக்கள் அனைவரும் கருப்புச்சின்னம் அணிந்து தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்திட வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
தமிழக மக்கள் அணியும் இந்த கருப்புச் சின்னம் மற்றும் போராட்டம், அதிமுக அரசின் கண்களை திறக்கட்டும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். என்றபோதிலும், எதிர்புகள் பல மீறி நாளை முதல் TASMAC கடைகளை திறக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.