தண்ணீர் பிரச்னைக்கு தீர்வு காண வலியுறுத்தி சென்னை சேப்பாக்கத்தில் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுகவினர் போராட்டத்தில் ஏராளமானோர் பங்கேற்பு!
குடிநீர் பிரச்னையைத் தீர்க்க அதிமுக அரசு ஆக்கப்பூர்வமான நடவடிக்கை எடுக்கக் கோரி தமிழகம் முழுவதும் நேற்று முன்தினம் திமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பொதுமக்களை திரட்டி அமைதியான முறையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் அந்தெந்த மாவட்ட தலைநகரங்களில் திமுக மாவட்ட செயலாளர்கள் பங்கேற்றனர்.
இந்நிலையில், சென்னையில் நிலவும் தண்ணீர் தட்டுப்பாட்டை போக்க வலியுறுத்தி சென்னை மேற்கு மாவட்ட தி.மு.க சார்பில் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. காலை 9.30 மணிக்கு சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை முன்பு நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் திமுக எம்.எல்.ஏ.க்கள் மற்றும் முன்னாள் அமைச்சர்கள் பங்கேற்றனர்.
Chennai: Dravida Munnetra Kazhagam (DMK) President MK Stalin joins DMK workers holding protest in Chepak, against the #TamilNadu government over acute water crisis in the city. pic.twitter.com/iEcJDriLAX
— ANI (@ANI) June 24, 2019
இதை தொடர்ந்து, தண்ணீர் பிரச்னைக்கு தீர்வு காண வலியுறுத்தி சேப்பாக்கத்தில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் மு.க.ஸ்டாலின் பேசுகையில், குடம் இங்கே! குடிநீர் எங்கே? என ஏற்பட்டுள்ள தண்ணீர் பிரச்னையை தமிழக அரசு தீர்க்க வேண்டும். மழைக்காக அதிமுகவினர் யாகம் நடத்தவில்லை; தங்களது பதவியை காப்பாற்றவே யாகம் நடத்துகின்றனர்.
மேலும், தேர்தல் வராமலேயே தமிழகத்தில் ஆட்சி மாற்றம் வரும். சபாநாயகரை நீக்குவதை விட முதல்வராக இருக்கும் எடப்பாடி பழனிசாமியை அகற்ற வேண்டும் என கூறினார். தமிழகத்தில் நிலவும் தண்ணீர் பிரச்சினை பற்றி விவாதிக்க கோரி மக்களவையில் திமுக நோட்டீஸ் அளித்துள்ளது. திமுக சார்பில் எம்.பி. டி.ஆர்.பாலு மக்களவையில் நோட்டீஸ் அளித்துள்ளார். நான் உள்ளாட்சி துறை அமைச்சராக இருந்த போதும் என்னை யாரும் உள்ளாட்சி துறை அமைச்சர் என யாரும் அழைக்க மாட்டார்கள். நல்லாட்சி துறை அமைச்சர் என்றே என்னை அழைப்பார்கள் என அவர் மல்லிடையே உரையாற்றினார்.
Chennai: Dravida Munnetra Kazhagam (DMK) holds protest in Chepak, against the #TamilNadu government over acute water crisis in the city; DMK President MK Stalin to join the protest soon. pic.twitter.com/MBnBTKPO85
— ANI (@ANI) June 24, 2019