திமுக எம்.எல்.ஏ மகன் வீட்டில் பட்டியலின இளம்பெண்ணுக்கு சித்ரவதை..! கதறி அழும் தாய்..! என்ன நடந்தது?

திமுக எம்எல்ஏ கருணாநிதி மகன் வீட்டில் வேலை செய்து வந்த பட்டியலின இளம்பெண்ணுக்கு சூடு வைத்து டார்ச்சர் செய்யப்பட்டதாக பாதிக்கப்பட்ட பெண்ணின் தாய் கண்ணீர் மல்க பகீர் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். 

Written by - Bhuvaneshwari P S | Edited by - S.Karthikeyan | Last Updated : Jan 19, 2024, 01:28 PM IST
  • திமுக எம்எல்ஏ மகன் வீட்டில் நடந்த கொடுமை
  • சிறுமியை அடைத்து வைத்து கடும் சித்திரவதை
  • அனைத்து தரப்பிலும் எழுந்த கண்டன குரல்கள்
திமுக எம்.எல்.ஏ மகன் வீட்டில் பட்டியலின இளம்பெண்ணுக்கு சித்ரவதை..! கதறி அழும் தாய்..! என்ன நடந்தது?  title=

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை திருக்கழுக்குன்றம் பகுதியைச் சேர்ந்த 18 வயது இளம்பெண் ஒருவர் குடும்ப வறுமை காரணமாக சென்னைக்கு வேலைக்கு வந்துள்ளார். அவர்  சென்னை திருவான்மியூர் சவுத் அவன்யூ பகுதியில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் மெர்லினா மற்றும் ஆண்ட்ரோ மதிவாணன் தம்பதியின் வீட்டில் கடந்தாண்டு மே மாதம் வீட்டு வேலைக்காக சேர்ந்துள்ளார். பல்லாவரம் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் கருணாநிதியின் மகன் தான் ஆண்ட்ரோ மதிவாணன். வேலைக்கு சேர்ந்த அந்த இளம்பெண்ணிடம் மாதம் 16 ஆயிரம் ரூபாய் சம்பளமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  

மேலும் படிக்க | கிளாம்பாக்கத்திற்கு வரவே வேண்டாம்... மின்சார ரயிலில் சிட்டிக்குள் வர இந்த இடத்தில் இறங்கவும்!

ஆனால் அந்த இளம்பெண்ணுக்கு தருவதாகச் சொன்ன பணத்தை கொடுக்காமல், மாதந்தோறும் வெறும் 5 ஆயிரம் ரூபாயை மட்டும் சம்பளமாக கொடுத்துள்ளனர்.  இதனால் கடந்த ஜீலை மாதம் அந்த இளம்பெண் பணி செய்ய விருப்பம் இல்லை எனக்கூறி சொந்த ஊருக்கே செல்வதாக மெர்லினா மற்றும் ஆண்ட்ரோ மதிவாணன் ஆகியோரிடம் கூறியுள்ளார், இதனால் ஆத்திரம் அடைந்த மெர்லினா மற்றும் ஆண்ட்ரோ மதிவாணன் தம்பதியினர் ரேகாவை மிரட்டி வேலை வாங்கியும், அடித்து துன்புறுத்தி முகம், கை, கால் பகுதிகளில் சூடு வைத்து கொடுமைபடுத்தியதாகவும் அந்த இளம்பெண் கண்ணீர் மல்க வேதனை தெரிவித்துள்ளார். 

இந்நிலையில் பொங்கல் அன்று மெர்லினா, ஆண்ட்ரோ மதிவாணன் இருவரும் இளம்பெண்ணை அழைத்துக்கொண்டு ரேகாவின் சொந்த ஊரான கள்ளக்குறிச்சி மாவட்டத்துக்கு சென்று விட்டு விட்டு வந்துள்ளனர். வீட்டுக்கு வந்த மகளை கண்ட அந்த அவரின் தாய் அதிர்ச்சி அடைந்துள்ளார். அந்த இளம்பெண்ணின் முகம், கை, கால்களில் காயம் இருப்பதை கண்ட தாய் கள்ளக்குறிச்சி பகுதியில் உள்ள அரசு மருத்துவமனையில் அவரை சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர், மருத்துவமனை மூலம் கள்ளக்குறிச்சி போலிசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு பாதிக்கப்பட்ட இளம்பெண்ணிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 


அதோடு மகளை எவ்வளவு கொடூரமாக சித்ரவதை செய்தார்கள் என்பதை கதறி அழுதுக்கொண்டே அந்த தாய் பேசும் வீடியோ அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் உள்ளது. அதில், காலை முதல் நள்ளிரவு 2மணி வரை இளம்பெண்ணை சரியாக உணவு வழங்காமல் வேலை வாங்கி டார்ச்சர் செய்ததாக அவர் தெரிவித்துள்ளார். 

இதுவரை திருவான்மியூர் காவல் நிலையத்தில் அந்த இளம்பெண் தரப்பில் மெர்லினா, ஆண்ட்ரோ மதிவாணன் மீது புகார்கள் எதுவும் வரவில்லை என திருவான்மியூர் போலிசார் தெரிவித்துள்ளனர். திமுக எம்.எல்.ஏ மகன் வீட்டில் இப்படி ஒரு சித்ரவதை நடந்துள்ளதாக பாதிக்கப்பட்ட பெண்ணே ஆதாரத்தோடு குற்றச்சாட்டு தெரிவித்துள்ள நிலையில், இதற்கு இதுவரை ஆண்ட்ரோ மதிவாணன் தரப்பில் எந்த விதமான விளக்கமும் அளிக்கப்படவில்லை. எம்.எல்.ஏ கருணாநிதிக்கு இந்த சம்பவம் குறித்து எதுவும் தெரியாது என்றும், இது அவரது மகன் வீட்டில் தான் நடந்துள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த குற்றச்சாட்டுக்கு தகுந்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என பாதிக்கப்பட்ட இளம்பெண்ணின் உறவினர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

மேலும் படிக்க | நாடு தற்போது ராமர் மயமாகி வருகிறது - ஆளுநர் ஆர்என் ரவி பேட்டி!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News