திராவிட மாடல் என சொன்னாலே பலருக்கும் வயிற்று எரிச்சலாக இருக்கிறது... எம்எல்ஏ எழிலன் அதிரடி!

Dravidian Model: திராவிட மாடல் என்று தமிழ்நாடு முதல்வர் சொல்லும் போது ஆளுநருக்கு, மத்திய பாஜக அரசுக்கு, ஆர்எஸ்எஸ் போன்றவர்களுக்கு வயிற்று எரிச்சலாக இருக்கிறது என திமுக எம்எல்ஏ எழிலன் பொதுக்கூட்டத்தில் பேசியுள்ளார்.

Written by - Sudharsan G | Last Updated : May 10, 2023, 09:49 AM IST
  • தமிழ் மொழியை படித்ததால் எங்கள் பிள்ளைகள் ஐடி நிறுவனங்களில் உள்ளார்கள் - எழிலன்.
  • கிராமப் புறங்களில் ஒன்றரை கோடி மக்களுக்கு இலவச மின்சாரம் - எழிலன்.
  • நம் வரிப்பணத்தை தனியார் தொண்டு நிறுவனத்திற்கு கொடுத்தது அதிமுக - எழிலன்.
திராவிட மாடல் என சொன்னாலே பலருக்கும் வயிற்று எரிச்சலாக இருக்கிறது...  எம்எல்ஏ எழிலன் அதிரடி! title=

Dravidian Model: சென்னை சோழிங்கநல்லூர் மத்திய பகுதி திமுக சார்பில் காரப்பாக்கத்தில் தமிழ்நாடு அரசின் இரண்டு ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் சோழிங்கநல்லூர் திமுக சட்டமன்ற உறுப்பினர் அரவிந்த் ரமேஷ் தலைமையில் நேற்றிரவு (மே 9) நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக ஆயிரம் விளக்கு தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் டாக்டர். எழிலன் நாகநாதன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

பலருக்கும் வயிறு எரிகிறது

பின்னர் மேடையில் பேசிய எம்எல்ஏ எழிலன்,"திராவிட மாடல் என்று தமிழ்நாடு முதலமைச்சர் சொல்லும் போது ஆளுநருக்கு, மத்திய பாஜக அரசுக்கும், ஆர்எஸ்எஸ் போன்றவர்களுக்கும் வயிற்று எரிச்சலாக இருக்கிறது.

தமிழ்நாடு என்று இருக்கும்போது நீங்கள் ஏன் 'திராவிட மாடல்' என்று சொல்லி வருகிறீர்கள் என்று பலரும் கேட்கிறார்கள். இது ஒன்று இரண்டு நாட்களில் உருவான தத்துவம் கிடையாது, காலம் காலமாக 2500 வருடமாக அடிமைப்பட்ட சமூகத்தை மீட்டெடுத்த வரலாறுதான், திராவிட மாடல் ஆட்சி. பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட பட்டியலின மக்களை சமூக பொருளாதாரத்தில் உயர்த்தி சுய மரியாதையோடு நடக்கவிட்ட தத்துவம் திராவிட மாடல் தத்துவம். அதனால்தான் பலருக்கு வயிறு எரிகிறது. 

'முட்டை கையில் பட்டால் தீட்டு...'

அனைத்து துறைகளிலும் சமத்துவத்தை கொடுத்த தத்துவம் நம்முடைய திராவிட மாடல் தத்துவம். சட்டசபையில் அமர்ந்திருக்கும்போது, காலை உணவு திட்டத்தை எதிர்க்கட்சி கொறாடா வேலுமணி அவர்கள் 'அட்ஷயா பாத்திரா என்று ஒரு தொண்டு நிறுவனத்திற்கு கொடுத்தோம்' என்று பேசினார். அந்த திட்டத்தை தான் நீங்கள் காப்பி அடித்து செய்து வருகிறார்கள் என்று பேசினார்.

அட்சய பாத்திரத் தொண்டு நிறுவனம் என்னுடைய தொகுதியில் தான் உள்ளது. அது ஆர்எஸ்எஸ்க்கு சொந்தமான தொண்டு நிறுவனம். சாப்பாட்டில் வெங்காயம் பூண்டு போடாத தொண்டு நிறுவனம் இது. முட்டையை வேகவைத்து கொடுக்க மாட்டார்கள். முட்டை கையில் பட்டால் தீட்டு என்று சொல்லக்கூடிய தொண்டு நிறுவனம் அது.

மேலும் படிக்க | பட்டியலினத்தவர்களுக்கு அமைச்சரவையில் பொறுப்பு: வானதி சீனிவாசன் கோரிக்கை

ஆரிய மாடல்...

இந்த தொண்டு நிறுவனத்திற்கு நம்முடைய வரிப்பணத்தை ஆளுநர் மூலம் 5 கோடி ரூபாயை கொடுத்து சென்னை மாநகராட்சியின் 22 கிரவுண்ட் நிலத்தை எந்த ஒரு அனுமதி பெறமால் தாரை வார்த்து கொடுத்து இருக்கிறார்கள். இதுகுறித்து, நானும் நிதி அமைச்சரும் சட்டமன்றத்தில் கேள்வி எழுப்பினோம்.

இப்போது அந்த திட்டம் குளறுபடியான  திட்டம், 22 கிரவுண்ட் நிலத்தை வாங்கி  ஆளுநர் மூலம் 5 கோடி ரூபாயை பெற்று கட்டிடத்தை கட்டி சென்னை மாநகராட்சியில் 43 மாநகராட்சி பள்ளிகளுக்கு உணவுகளை வழங்கி வருகிறார்கள். இதுதான் ஆரிய மாடல். தமிழ்நாடு முதலமைச்சர் 18 லட்சம் குழந்தைகளுக்கு மகளிர் சுய உதவிக் குழுக்கள் மூலம் காலையில் சுவையான சிற்றுண்டி வழங்கும் திட்டம்தான் காலை சிற்றுண்டி திட்டம்.

இலவச மின்சாரம்

எங்களுடைய வரிப்பணத்தை தனியார் தொண்டு நிறுவனத்திற்கு தாரை வார்த்து கொடுத்தது அதிமுக ஆட்சி. அரசாங்க வரிப்பணத்தை செம்மையாக செயல்படுத்தி, திருப்பி மக்களுக்கு கொடுப்பது தான் திராவிட மாடல் ஆட்சி. நம்முடைய ஆட்சியில் பள்ளி குழந்தைகளுக்கு அனைத்தையும் கொடுத்ததால் தான் தமிழ்நாட்டு மக்கள் அனைவரும் அரசு பள்ளியை நோக்கி வருகிறார்கள்.

மின்சாரத்துறையில் இந்த ஆண்டு 19000 ஆயிரம் மெகாவாட் நாம் அடைந்து விட்டோம். இதற்கு முன்னர் 12000 ஆயிரம் மெகாவாட்டிற்கு 3 அல்லது 4 மணி நேரம் மின்சாரம் இருக்காது. தற்போது மிகையில்லா மின்சாரம் கொடுத்து வரும் அரசு நம் திராவிட மாடல் அரசு. கிராமப் புறங்களில் ஒன்றரை கோடி மக்களுக்கு இலவச மின்சாரம் கொடுத்தது நம்முடைய திராவிட மாடல் அரசு.

மேலும் படிக்க | ஜெயலலிதா பரவாயில்லை, எடப்பாடி பழனிசாமி தான் மோசம் - அமைச்சர் தாமோ அன்பரசன்!

தமிழகம் வந்த ஜப்பான் நிறுவனம்

எடப்பாடி பழனிச்சாமி ஆட்சிக் காலத்தில் ஒன்றிய அரசின் பட்டியலில் நாம் பொருளாதாரத்தில் முதலீடுகளை ஈர்ப்பதில் 16ஆவது இடத்தில் இருந்தோம், தற்போது திராவிட மாடல் 2 ஆண்டு ஆட்சியில் 3 இடத்தில் இருந்து வருகிறோம். தொழில் தொடங்க சாத்தியமான கூறுகள் உள்ள மாநிலம் நம்முடைய தமிழ்நாடு மாநிலம் தான். தற்போது ஜப்பானில் இருந்து வந்த ஒரு நிறுவனம் ஒப்பந்தம் செய்து வேலைவாய்ப்பு திட்டத்தை கொடுத்து வருகிறோம்.

இந்த சாலையில் மெட்ரோ ரயில் பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்கு பீகார், உத்திரப் பிரதேச மாநிலங்களில் வேலை செய்வதற்கு ஆட்கள் வருவார்கள். அதில் பிற்டுத்தப்பட்டோர் மக்கள் குடும்பம் குடும்பமாக சிறிய டென்ட் அமைத்து வேலை செய்து வருகிறார்கள்.

தமிழ்நாடு உதவுகிறது

தமிழ்நாட்டில் மிகவும் பிற்படுத்தப்பட்ட, பட்டியலின மக்கள் ஐடி நிறுவனங்களில் பணிபுரிந்து வருகிறார்கள். அதே சாலையில் பாலம் அமைக்கும் பணியில் பிற்படுத்தப்பட்ட மக்கள் பீகார் மற்றும் உத்திரப்பிரதேச மாநிலங்களில் இருந்து இந்த வேலை செய்து வருகிறார்கள். நீங்கள் எங்களுக்கு ஹிந்தி திணிப்பை பற்றி சொல்கிறீர்களா, ஹிந்தி படித்தால் நாங்கள் வளம் பெற்று விடுவோம் என்று சொல்கிறீர்கள். பாவம் ஹிந்தியை படித்த இந்த மக்களுக்கு நான் சொல்கிறேன், உங்கள் மொழியை பாதுகாக்க அங்கே ஒரு பேரறிஞர் அண்ணா, கருணாநிதி மற்றும் திராவிட மாடல் முதலமைச்சர் ஸ்டாலின் கிடையாது. 

எங்கள் மொழியை பாதுகாத்து நவீன தன்மையில், சமூக பொருளாதாரத்தில் உயர்த்திய மாபெரும் தலைவர்கள் இருந்தார்கள். அதனால் தான் எங்கள் குழந்தைகள் ஐடி நிறுவனங்களில் பணிபுரிந்து வருகிறார்கள். ஆனால் உங்கள் மக்கள் தினக்கூலிக்காக தமிழ்நாட்டை நோக்கி வருகிறார்கள். 30 லட்சம் பேர் வேலை செய்து வருகிறார்கள். தமிழ்நாட்டில்,அவர்களுக்கு நாம் உதவி செய்கிறோம்" என்றார். உடன் திமுக மாமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் இருந்தனர். 

மேலும் படிக்க | தமிழ்நாடு அமைச்சரவை மாற்றம்: நாசர் நீக்கம்! டிஆர்பி ராஜாவுக்கு பதவி

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News