ஒரே நாடு, ஒரே கல்வி என ஒரே சாப்பாடு என்ற நிலை ஏற்படும் - அமைச்சர் பொன்முடி பேச்சு!

ஒரே நாடு, ஒரே கல்வி என்று சொல்பவர்கள் ஒரே சாப்பாடு என்று சொல்லும் நிலை ஏற்படும், அதனை ஒழிக்க வேண்டிய பொறுப்பு நம்மிடம் உள்ளது என பூந்தமல்லியில் நடந்த பொதுக்கூட்டத்தில் அமைச்சர் பொன்முடி பேச்சு.  

Written by - RK Spark | Last Updated : Mar 5, 2023, 11:19 AM IST
  • குல கல்வி முறையை பாஜக கொண்டு வர முயற்சி.
  • நாங்கள் மதத்திற்கு எதிரானவர்கள் அல்ல.
  • உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி பேச்சு.
ஒரே நாடு, ஒரே கல்வி என ஒரே சாப்பாடு என்ற நிலை ஏற்படும் - அமைச்சர் பொன்முடி பேச்சு! title=

திருவள்ளூர் மேற்கு மாவட்டம், பூந்தமல்லி நகர திமுக சார்பில் தமிழக மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் மற்றும் ஈரோடு இடை தேர்தல் வெற்றிக்கான பொது கூட்டம் பூந்தமல்லி அடுத்த குமணன்சாவடியில் நடைபெற்றது. பூந்தமல்லி நகர செயலாளர் திருமலை தலைமையில் நடைபெற்ற விழாவில் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, பால்வளத்துறை அமைச்சர் நாசர் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். இதில் உயர் கல்வி துறை அமைச்சர் பொன்முடி பேசுகையில்: இறந்து போனவர்களுக்கு கொடுப்பது சடங்கு, சம்பிரதாயம் ஆனால் நாம் தலைவர் பிறந்த நாளை சடங்கு, சம்பிரதாயமாக அல்ல அவர் எந்த கொள்கைக்காக போராடினாரோ அந்த கொள்கைகளை எடுத்துரைப்பதற்காக பிறந்த நாளை கொண்டாடுகிறோம்.

மேலும் படிக்க | ஸ்டாலின் ஜேக்கப் மரணம்... முதலமைச்சர் இரங்கல்... இணையம் முழுவதும் கண்ணீர் அஞ்சலி

குல கல்வி முறையை பாஜக கொண்டு வர முயற்சி செய்கிறது எனவும் தமிழ் முக்கியம் என உணர்த்திய முதல்வர் மு.க.ஸ்டாலின் என தெரிவித்தார். மேலும் தற்போது தேர்தல் வாக்குறுதி போல் மகளிருக்கும் ஆயிரம் வழங்கப்படும் என முதல்வர் தெரிவித்து விட்டார், நாங்கள் மதத்திற்கு எதிரானவர்கள் அல்ல மதத்தால் அடிமை படுத்துபவர்களுக்கு எதிரானவர்கள் எனவும் மதத்தை சொல்லி பிரிக்க நினைப்பவர்கள் தான் பாஜகவினர் என தெரிவித்தார். 

தொடர்ந்து பேசிய அவர் பாஜக இருந்தால் இந்தியாவே உருப்படாது என்றும் ஒரே நாடு, ஒரே கல்வி, ஒரே தேர்தல் என கூறுபவர்கள் இன்னும் சில காலங்கள் சென்றால் ஒரே சாப்பாடு என்பார்கள் அதனை ஒழிக்க வேண்டிய பொறுப்பு நம்மிடம் உள்ளது என பேசினார். பின்னர் கூட்டத்தில் கலந்து கொண்ட பொதுமக்களுக்கு சில்வர் குடம் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

மேலும் படிக்க | வடமாநில தொழிலாளர்களுக்கு எதிராக வெறுப்பை விதைப்பவர்கள் மீது நடவடிக்கை தேவை: வானதி சீனிவாசன்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News