பிரதமர் மோடி தைரியம் இருந்தால் எங்கள் மீது ரெய்டு விடட்டும் - திமுக அமைச்சர் சவால்

பிரதமர் மோடிக்கு தைரியம் இருந்தால் எங்கள் மீது ரெய்டு விடட்டும் என திமுக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி சவால் விட்டுள்ளார். மடியில் கனமில்லை என்பதால் வழியில் பயமில்லை என்றும் கூறியுள்ளார்.    

Written by - S.Karthikeyan | Last Updated : Mar 6, 2024, 08:11 AM IST
  • மோடி எங்கள் மீது ரெய்டு விடட்டும்
  • தைரியம் இருந்தால் இதை செய்வாரா?
  • அமைச்சர் ரகுபதி பகிரங்கமாக சவால்
பிரதமர் மோடி தைரியம் இருந்தால் எங்கள் மீது ரெய்டு விடட்டும் - திமுக அமைச்சர் சவால் title=

புதுக்கோட்டையில் தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், " கால்டுவெல் குறித்து ஆளுநர் பேசிய விவகாரத்தில் தமிழ்நாடு ஆளுநருக்கு ஒரு டாக்டர் பட்டமும் அறிவியல் ஆராய்ச்சிக்கு பட்டமும் கொடுத்து விடலாம். முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி என்ன படித்துள்ளார் என்பது அனைவருக்கும் தெரியும். கலைஞர் தொல்காப்பியம் எழுதியதை போல் எந்த ஒரு படித்த மேதாவிகளும் எழுதிவிட முடியாது. ஒரு உரை எழுத வேண்டும் என்று சொன்னால் அவர்களுக்கு அறிவு இருந்தால் போதும். கல்லூரி படித்துவிட்டு ‌ தான் எழுத வேண்டும் என்று கிடையாது" என கூறினார். 

மேலும் படிக்க | பரபரக்கும் நீலகிரி தொகுதி - அதிமுகவுக்கு திமுக பகிரங்க சவால்..!

மேலும், இந்த புதிய கண்டுபிடிப்பை கண்டுபிடித்த ஆளுநருக்கு phd பட்டம் வேண்டும் என்றால் கொடுப்போம் என அமைச்சர் ரகுபதி பேசினார். தொடர்ந்து பேசிய அவர், ஆளுநர் எதை வேண்டுமானாலும் பேசி க்கொண்டு போகட்டும். அவர் எண்ணுவது தினசரி பேசும் பொருளாக இருக்க வேண்டும் என்பதுதான் ஆளுநரின் லட்சியம். பாஜகவும் போய்விட்டது அதிமுகவும் போய்விட்டது. இனி திமுகவை எதிர்த்து ஏதேனும் கருத்துக்கள் வர வேண்டும் என்றால், பேசு பொருளாக தான் இருக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு இன்றைக்கு எதிர்க்கட்சியாக ஆளுநர் செயல்பட்டு வருகிறார் என விமர்சித்தார்.

திமுக கொள்ளை அடித்து வைத்துள்ள பணத்தை மீட்போம் என்று சொல்லும் பிரதமர் மோடி, முதலில் அவர் 10 பணக்காரர்களிடம் கொடுத்து வைத்துள்ள பணத்தை மீட்டு கொண்டு வந்தால் இந்தியாவில் உள்ள அனைத்து தரப்பு மக்களும் கோடீஸ்வரர்களாக மாறிவிடுவார்கள் என திமுக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கூறியுள்ளார். தமிழ்நாட்டைப் பற்றி ஏன் மோடி பேசுகிறார். நாங்கள் எந்த பணத்தையும் கொள்ளையடிக்கவில்லை எந்த பணமும் எங்களிடம் கிடையாது. முடிந்தால் என்ன வேண்டும் என்றாலும் சோதனை போட்டு பார்த்துக் கொள்ளட்டும். மடியில் கனமில்லை எங்களுக்கு வழியில் பயமில்லை என்றும் அமைச்சர் ரகுபதி கூறினார்,

இந்தியாவில் 10 பணக்காரர்களை மோடி உருவாக்கி வைத்துள்ளார் அவர்களிடம் இருக்கக்கூடிய பல கோடிகளை எந்தெந்த வகையில் கொடுத்து வைத்திருக்கிறார் என்பது தெரியும். எல்லாரையும் ஏழைகளாக ஆக்கிவிட்டு 10 நபர்களை தான் பணக்காரர்கள் ஆக்கியுள்ளார். அவருக்கெல்லாம் மக்கள் மதிப்பு கொடுக்க மாட்டார்கள். தேர்தல் அறிவித்துள்ளதால் கண்துடைப்பிற்காக எய்ம்ஸ் கட்டுமான பணியை தொடங்கியுள்ளனர். அவர்கள் தேர்தலுக்காக எண்ண வேண்டும் என்றாலும் செய்வார்கள். இது போன்ற கண் துடைப்பு பணிகளை செய்வதில் அவர்கள் மிகுந்த கெட்டிக்காரர்கள். தற்போது கூட உங்கள் வங்கி கணக்கில் 25 லட்சம் வரப்போகிறது என்று சொல்வார்கள். ஜூன் மாதம் 1ம் தேதி வரும் என்று கூறுவார்கள் ஜூன் மாதம் ஒன்றாம் தேதி அந்த 25 லட்சம் ரூபாய் பணமும் வராது அவரும் வரமாட்டார் என அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க | பிரதமர் மோடி - பிடிஆர் ரகசிய சந்திப்பு..! வெளியான புகைப்படம் - பின்னணி என்ன?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News