கர்நாடக அரசை கண்டித்து திமுக-வினர் மாபெரும் ஆர்ப்பாட்டம்...

தென்பெண்ணை ஆற்றில் தடுப்பணை கட்டும் கர்நாடக அரசை கண்டித்து விழுப்புரம் மாவட்டம் திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. 

Last Updated : Nov 21, 2019, 11:53 AM IST
  • கொட்டும் மழையிலும் விழுப்புரம் மத்திய மாவட்டச் செயலாளர் முனைவர் க.பொன்முடி எம்.எல்.ஏ தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
  • தென்பெண்ணையின் கிளையான மார்க்கண்டேய நதியின் குறுக்கே கட்டப்படும் அணையினால் தமிழகத்தில் தர்மபுரி உள்ளிட்ட 5 மாவட்டங்கள் நீர் பற்றாக்குறை
கர்நாடக அரசை கண்டித்து திமுக-வினர் மாபெரும் ஆர்ப்பாட்டம்... title=

தென்பெண்ணை ஆற்றில் தடுப்பணை கட்டும் கர்நாடக அரசை கண்டித்து விழுப்புரம் மாவட்டம் திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. 

விழுப்புரம் மாவட்ட திமுக சார்பில் தென்பெண்ணை ஆற்றில் தடுப்பணை கட்டும் கர்நாடக அரசையும், செயல்படாத அதிமுக அரசையும் கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

கொட்டும் மழையிலும் விழுப்புரம் மத்திய மாவட்டச் செயலாளர் முனைவர் க.பொன்முடி எம்.எல்.ஏ தலைமையில் நடைபெற்றது. விழுப்புரம் வடக்கு மாவட்டச் செயலாளர் கே.எஸ் மஸ்தான் எம்.எல்.ஏ, தெற்கு மாவட்டச் செயலாளர் ஆ.அங்கையற்கன்னி ஆகியோர் இந்த கண்டன ஆர்பாட்டத்திற்கு முன்னிலை வகித்தனர்.  விழுப்புரம் மத்திய, வடக்கு மற்றும் தெற்கு மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர், ஊராட்சி நிர்வாகிகள் பலரும் இந்த ஆர்ப்பாட்டதிதல் கலந்துக்கொண்டனர்.

முன்னதாக தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே கர்நாடக அரசு அணை கட்ட எதிர்ப்பு தெரிவித்து தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் ஆற்றின் குறுக்கே அணைகட்ட கர்நாடகாவுக்கு தடையில்லை என உத்தரவு பிறப்பித்து தமிழக அரசின் மனுவை தள்ளுபடி செய்தது.

உச்சநீதிமன்றத்தின் இந்த அதிரடி உத்தரவால், தென்பெண்ணையின் கிளையான மார்க்கண்டேய நதியின் குறுக்கே கட்டப்படும் அணையினால் தமிழகத்தில் தர்மபுரி உள்ளிட்ட 5 மாவட்டங்கள் நீர் பற்றாக்குறைவால் கடுமையாக பாதிப்படையும். இதை அறிந்திருந்தும் தமிழக அரசு, உச்ச நீதிமன்றத்தில் சரியாக வாதிடாமல் வாய்ப்பினை கோட்டை விட்டதாக திமுக உள்ளிட்ட பல கட்சிகள் கண்டன குரலை எழுப்பியுள்ளன. 

இந்நிலையில் அதிமுக தலையிலான மாநில அரசினை கண்டித்து இன்று கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் ஆகிய 5 மாவட்டங்களில் திமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவதாக அறிவித்திருந்தனர். அதன்படி விழுப்புரம் மாவட்ட திமுக சார்பில் தென்பெண்ணை ஆற்றில் தடுப்பணை கட்டும் கர்நாடக அரசையும், செயல்படாத அதிமுக அரசையும் கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

Trending News