சென்னை மெட்ரோ ரயிலில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சக பயணிகளுடன் பயணம் செய்து கலந்துரையாடி வியப்பில் ஆழ்த்தியுள்ளார்!
மதுரையில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்த தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், தமது வீட்டிற்கு செல்ல மெட்ரோ ரெயிலில் பயணம் மேற்கொண்டார். சென்னை விமான நிலையத்திலிருந்து தேனாம்பேட்டை வரை மெட்ரோ ரயிலில் பயணம் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மெட்ரோ ரயிலில் ஸ்டாலின் ஏறியதும், உள்ளே இருந்த பயணிகள் உற்சாகமடைந்து அவருடன் புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.
Took @cmrlofficial on my way back, from Chennai airport to teynampet. It was a smooth ride #cmrl pic.twitter.com/dOkDRzWmGf
— M.K.Stalin (@mkstalin) July 24, 2019
அப்போது, மெட்ரோ ரயிலில் பயணிக்க வேண்டும் என தமக்கு விருப்பம் இருப்பதாக குறிப்பிட்ட அவர், மற்ற பயணிகளுக்கு இடையூறு ஏற்படும் என்பதால் மெட்ரோ ரயில் பயணத்தை தவிர்ப்பதாகவும் தெரிவித்தார். தொடர்ந்து சென்னை மெட்ரோ ரயில் சேவை குறித்து பயணிகளிடம் கேட்டறிந்தார்.
மெட்ரோ ரெயில் கட்டணம் அதிகமாக இருப்பதாக கூறிய பொதுமக்கள் மாணவர்களுக்காவது கட்டணத்தை குறைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர்.
தொடர்ந்து செய்தியாளர்களிடன் பேசிய திமுக தலைவர் சென்னை மெட்ரோ திட்டமானது திமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்டது எனவும் பெருமிதம் தெரிவித்தார்.