சென்னை: காங்கிரஸ் கட்சியுடன் தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தையில் இழுபறி நீடித்து வந்தது. கடந்த தேர்தல்களை விட மிகவும் குறைவான தொகுதி ஒதுக்க திமுக முன் வந்தததால் காங்கிரஸ் கடும் அதிருப்தியில் இருந்து வந்தது.
இது தொடர்பாக இரு கட்சிகளும் பலகட்டமாக பேச்சுவார்த்தைகளை நடத்தின. தி.மு.க. கூட்டணியில் (DMK ALLIANCE) இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு 3 இடங்களும், மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 இடங்களும், விடுதலை சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்டு கட்சி மற்றும் ம.தி.மு.க.வுக்கு (MDMK) தலா 6 இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியுடன் இன்னும் தொகுதி உடன்பாடு ஏற்படவில்லை.
Also Read | தேர்தல் களத்தில் திமுக: Prashant Kishor வகுத்த வியூகம் வெற்றி பெறுமா? சூரியன் உதயமாகுமா?
இந்த நிலையில், இன்று காலை திமுகவுடனான தொகுதி உடன்பாடு கையெழுத்தாகும் என்று காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் நேற்று இரவு தெரிவித்தார்.
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 23 தொகுதிகள், பாஜகவுக்கு 20 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. முதல்வர், துணை முதல்வர் உள்பட 6 வேட்பாளர்கள் போட்டியிடும் 6 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலும் வெளியாகிவிட்டது. அதிமுக கூட்டணையில் தேமுதிக பேச்சுவார்த்தைதான் இழுபறியில் உள்ளது.
திமுக வேட்பாளர்கள் பட்டியல் வரும் 10-ந் தேதி வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் ஆறாம் தேதியன்று தமிழகத்தில் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் ஒருமாத காலமே உள்ள நிலையில், திமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு இறுதி செய்யப்பட்டு வருகின்றன.
Also Read | DMK கூட்டணியில் CPIக்கு 6 தொகுதிகள் ஒதுக்கீடு, ஒப்பந்தம் இறுதியானது
தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR