DMK கூட்டணி கட்சிகளுக்கு எந்தெந்த தொகுதிகள் என்ற பட்டியலை வெளியிட்டது திமுக!!
மக்களவை தேர்தலையும், தமிழக சட்டமன்ற இடைத் தேர்தலையும் சந்திக்க திமுக, காங்கிரஸ், ம.தி.மு.க. , கம்யூனிஸ்டு கட்சிகள், விடுதலை சிறுத்தைகள், கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி, இந்திய யூனியன் முஸ்லீம் லீக், ஐ.ஜே.க. ஆகிய கட்சிகள் இணைந்து கூட்டணி அமைத்துள்ளன.
இதில் திமுக 20 தொகுதிகளிலும், காங்கிரஸ் புதுச்சேரி உள்ளிட்ட 10 தொகுதிகளிலும், இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள் ஆகிய கட்சிகள் தலா இரு தொகுதிகளிலும், இதர கட்சிகள் தலா ஒரு தொகுதிகளிலும் போட்டியிடுவது என்று முடிவு எடுக்கப்பட்டது. இதற்காக அந்தெந்த கட்சி தலைவர்கள், திமுக தலைவர் ஸ்டாலினுடன் ஒப்பந்தம் செய்து உள்ளனர்.
இதையடுத்து கூட்டணி கட்சிகள் இடையிலான தொகுதி ஒதுக்கீடு குறித்த பேச்சுவார்த்தை கடந்த சில நாட்களாக சென்னையில் நடைபெற்று வந்தது. இதில் காங்கிரஸ் தவிர ஏனைய கட்சிகள் அனைத்துக்கும் தொகுதி ஒதுக்கீடு செய்வது குறித்து சுமூக முடிவு எட்டப்பட்டது. காங்கிரஸ் கட்சிக்கான 9 தொகுதிகள் எவை, எவை என்பதை அடையாளம் காண்பது குறித்து இரு கட்டங்களாக பேச்சுவார்த்தை நடைபெற்றது.
இந்நிலையில், தற்போது DMK கூட்டணி கட்சிகளுக்கு எந்தெந்த தொகுதிகள் என்ற பட்டியலை வெளியிட்டது திமுக. அதன் முழுவிவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
> திமுக போட்டியிடும் தொகுதிகள்: வடசென்னை, தென்சென்னை, மத்திய சென்னை, ஸ்ரீபெரும்புதூர், காஞ்சிபுரம், அரக்கோணம், வேலூர், தருமபுரி, திருவண்ணாமலை, சேலம், கள்ளக்குறிச்சி, நீலகிரி, பொள்ளாச்சி, திண்டுக்கல், கடலூர், மயிலாடுதுறை, தஞ்சை, தூத்துக்குடி, தென்காசி, திருநெல்வேலி,
> காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகள்: திருவள்ளூர், கிருஷ்ணகிரி, ஆரணி, கரூர், திருச்சி, சிவகங்கை, தேனி, விருதுநகர், கன்னியாகுமரி, புதுச்சேரி,
> மார்க்சிஸ்ட் கட்சி போட்டியிடும் தொகுதிகள்: கோவை, மதுரை.
> இந்திய கம்யூனிஷ்ட் போட்டியிடும் தொகுதிகள்: திருப்பூர், நாக்கை,
> மக்களவை தேர்தலில் சிதம்பரம், விழுப்புரம் தனித்தொகுதிகளில் விடுதலை சிறுத்தைகள் கட்சி போட்டியிடும்.
> மக்களவை தேர்தலில் மதிமுக ஈரோடு தொகுதியில் போட்டி.
> மக்களவை தேர்தலில் இராமநாதபுரம் தொகுதியில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் போட்டியிடும்.
> நாமக்கல் தொகுதியில் கொ.ம.தே.க. கட்சி போட்டியிடும்.
> பெரம்பலூர் தொகுதியில், ஐ.ஜே.கே. கட்சி போட்டியிடும் என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.