அதிமுக கூட்டணியில் இணைய திமுக நட்புறவு கட்சிகள் விருப்பம்?

எதிர்வரும் மக்களவைத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் இணைய திமுக கூட்டணி கட்சிகள் விருப்பம் தெரிவிப்பதாக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்!

Last Updated : Feb 9, 2019, 04:33 PM IST
அதிமுக கூட்டணியில் இணைய திமுக நட்புறவு கட்சிகள் விருப்பம்? title=

எதிர்வரும் மக்களவைத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் இணைய திமுக கூட்டணி கட்சிகள் விருப்பம் தெரிவிப்பதாக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்!

இந்தாண்டு ஏப்ரல்-மே மாதத்தில் மக்களவை தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இத்தேர்தலில் வெற்றிப்பெற்று ஆட்சியை கைப்பற்ற தேசிய கட்சிகளான காங்கிரஸ் மற்றும் பாஜக இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. இரு கட்சி தலைவர்களும் நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

எனினும் தமிழகத்தை பொருத்தவரையில் இரண்டு கட்சிகளுக்கும் தனி பலம் இல்லா பட்சத்தில் மாநில கட்சிகளுடன் கூட்டணி அமைக்க விரும்புகிறது. அந்த வகையில் ஏற்கனவே காங்கிரஸ் கட்சி திமுக-வுடன் இணைந்துள்ளது. இன்னும் சில சிறு கட்சிகளும் இந்த கூட்டணியில் இணைந்துள்ளது.

மறுபுறம் மத்தியில் ஆட்சி அமைத்துள்ள பாஜக-விற்கு தமிழகத்தில் மாநில கட்சிகளில் ஆதரவு இதுவரை கிடைக்கவில்லை. கூட்டணி குறித்து பகிரங்கமாக அறிவிக்காத அதிமுக தான் பாஜக-விற்கு ஆதரவு அளிக்கும் என அரசியல் விமர்சகர்கள் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் தற்போது திமுக-வில் இருக்கும் கட்சிகளும் அதிமுக கூட்டணியில் இணைய விருப்பம் தெரவிப்பதாக அதிமுக கட்சியை சேர்ந்த அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

தற்போது திமுக கூட்டணியில், காங்கிரஸ் கட்சி மட்டும்தான் உள்ளது... மதிமுக, விசிக, சிபிஐ, சிபிஎம் உள்ளிட்ட சிறிய கட்சிகள் திமுக-வுடன் தொடர்ந்து நட்புடன் தான் இருக்கிறது. இந்தக் கட்சிகளும் விரைவில் திமுக கூட்டணியில் இணைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேவேலையில் கட்சிகளின் எண்ணிக்கை அதிகரிப்பதால் திமுக-வுக்கு தொகுதி பங்கீடுப் பிரச்னை எழலாம் எனவும் தெரிகிறது.

அதேவேலையில் அதிமுக கூட்டணியில், பாஜக, பாமக, தமிழ் மாநில காங்கிரஸ், புதிய தமிழகம், தேமுதிக மற்றும் சமத்துவ மக்கள் கட்சி ஆகியவை இடம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதிமுக கூட்டணி குறித்து இன்னும் எந்த அதிகாரபூர்வ முடிவும் வரவில்லை. 

இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார், ‘திமுக கூட்டணி வலுவாக இருப்பதாக கூறப்பட்டு வருகிறது. ஆனால் அந்தக் கூட்டணியிலிருந்து எங்கள் கட்சித் தலைமையிலான கூட்டணியில் இணைய பலர் தூது விட்டு வருகின்றனர். எந்தக் கட்சி தூது விட்டது என்பது குறித்தெல்லாம் எங்களால் இப்போது சொல்ல முடியாது. அது ரகசியம்' என்று சூசகமாக தெரிவித்து தமிழக அரசியல் களத்தில் பரபரப்பினை உண்டாக்கியுள்ளார்.

Trending News