நேற்று சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள விஜயகாந்த் இல்லத்திற்கு தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் தமிழக அமைச்சர் ஜெயக்குமார் ஆகியோர் சென்றனர். சுமார் ஒரு மணிநேரம் விஜயகாந்த்துடன் ஆலோசனை நடத்தினர்.
தமிழக சட்டமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவராக விஜயகாந்த் இருந்தவர். அவரது கட்சிக்கு கணிசமான வாக்குவங்கி இருக்கிறது. ஏற்கனவே திமுக தலைவர் ஸ்டாலின் மற்றும் சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமாரும் விஜயகாந்தை அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார்கள். மறுபக்கம் டிடிவி தினகரனுடன் விஜயகாந்த் இணைவாரா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
இந்தநிலையில், இன்று தேமுதிக ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் கூட்டணி குறித்து முக்கிய முடிவு எடுக்கப்பட்டது என்றும், நாளை கூட்டணி குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என தேமுதிக சார்பில் தெரிவிக்ப்பட்டு உள்ளது.