கண்ணீர் மல்க வாக்கு சேகரித்த தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த்!

DMDK Premalatha Vijayakanth Election Campaign in Kallakurichi: வாணாபுரத்தில் அதிமுக வேட்பாளர் குமரகுருவிற்கு ஆதரவாக கண்ணீர் மல்க வாக்கு சேகரித்த தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வீடியோ வைரல் ஆகி வருகிறது.   

Written by - JAFFER MOHAIDEEN | Last Updated : Apr 1, 2024, 01:34 PM IST
  • மேடையில் கண்ணீர் சிந்திய பிரேமலதா.
  • விஜயகாந்த் குறித்து பேசியதால் நெகிழ்ச்சி.
  • அதிமுக வேட்பாளரை ஆதரித்து பிரச்சாரம்.
கண்ணீர் மல்க வாக்கு சேகரித்த தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த்! title=

DMDK Premalatha Vijayakanth Election Campaign in Kallakurichi: தமிழ்நாடு முழுவதும் ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக நாடாளுமன்ற தேர்தல் நடைபெறுகிறது.  இதனை ஒட்டி தமிழகம் முழுவதும் அரசியல் கட்சிகள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.  இந்நிலையில், கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற அதிமுக வேட்பாளர் குமரகுருவிற்கு வாக்கு சேகரிக்கும் விதமாக கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற தொகுதி ரிஷிவந்தியம் சட்டமன்ற தொகுதியில் உள்ள  வாணாபுரம் பகுதியில் அமைக்கப்பட்ட தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கலந்து கொண்டார்.  மேடையில் அதிமுக வேட்பாளர் குமரகுரு, தேமுதிக பற்றியும் விஜயகாந்த் பற்றியும் பேசும் போது நா தழுதழுத்து பேசினார். அதேபோல் அவர் பேசியதை மேடையில் அமர்ந்து கேட்டுக் கொண்டிருந்த தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அதிமுக வேட்பாளர் குமரகுரு பேச பேச கண்ணீர் விட்டு அழுதார். 

மேலும் படிக்க | பணமதிப்பிழப்பின் நோக்கம் என்ன ஆனது... உச்ச நீதிமன்ற நீதிபதி அதிரடி கருத்து!

அதேபோல வேட்பாளர் குமரகுருவை ஆதரித்து பேசும்போது தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், கேப்டன் குறித்தும், ரிஷிவந்தியம் சட்டமன்ற தொகுதி குறித்தும் பேசுகையில் கண்ணீர் விட்டு அழுதார். பின்னர் தொண்டர்களிடம் நமது கூட்டணி கட்சியின் அதிமுக வேட்பாளர் குமரகுருவிற்கு வாக்களிக்க வேண்டும் என கூறி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். இந்த கூட்டத்தில் சுமார் 5000க்கும் மேற்பட்ட தேமுதிக அதிமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இத்தனை பேர் கூடிய கூட்டத்திற்கு வெறும் 100 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டது என்பதை குறிப்பிடத்தக்கது.

மறுபுறம், மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் பாபுவை ஆதரித்து மயிலாடுதுறை சின்னக்கடை வீதியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக் கூட்டத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கலந்து கொண்டார். இந்த கூட்டத்தில் மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட மயிலாடுதுறை, சீர்காழி, பூம்புகார், கும்பகோணம், பாபநாசம், திருவிடைமருதூர் உள்ளிட்ட ஆறு சட்டமன்ற தொகுதியைச் சேர்ந்த 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அதிமுக மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர். மேலும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை வரவேற்கும் விதமாக அதிமுக சார்பில் சாலையின் இருபுறமும் அலங்கார தோரணமாக வாழை மரங்கள், செங்கரும்பு கட்டப்பட்டு செண்டை மேளங்கள் முழங்க உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. 

பின்னர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் பேசி முடித்துவிட்டு திருவாரூர் மாவட்டத்தில் நடைபெற உள்ள பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ள சென்றார்.  இதனிடையே அவர் சென்ற பிறகு சாலைகளில் இருபுறமும் அலங்கார தோரணங்களாக கட்டப்பட்டிருந்த வாழை மரங்களில் உள்ள வாழைத்தார்களை கட்சி தொண்டர்கள் போட்டி போட்டு மரத்தில் ஏறி பறித்து கொண்டு சென்றது வேடிக்கையாக இருந்தது. மேலும் எடப்பாடி பழனிசாமி கூட்டத்தை முடித்துவிட்டு சென்ற பின்னர் மேடையின் கீழே அதிமுக தொண்டர் ஒருவர் குடிபோதையில் படுத்து கிடந்தார். அவரை அங்கு இருந்த அதிமுக கட்சியினர் அவரை தூக்கி அனுப்பி வைத்தனர். அந்த மது பிரியர் வெளியே செல்லாமல் அங்கேயே தடுமாறி சுற்றி சுற்றி திரிந்தார். மேலும் அவரை மேடைக்கு அழைத்த மயிலாடுதுறை மாவட்ட செயலாளர் பவுன்ராஜ் மதுபிரியருக்கு துண்டு அணிவித்து வழி அனுப்பி வைத்தார்.

மேலும் படிக்க | 6 நாட்களாக தேர்தல் பிரச்சாரத்துக்கு செல்லாத பிரதமர் மோடி! உளவுத்துறை கொடுத்த அதிர்ச்சி ரிப்போர்ட்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News