விஜயகாந்த் - பிரேமலதா தம்பதியர் தங்கள் 28_வது திருமண நாள் இன்று கொண்டாடினார்கள். அவர்களுடன் தேமுதிக நிர்வாகிகள், தொண்டர்களும் கலந்துக்கொண்டு கொண்டாடினார்கள். விஜயகாந்த் - பிரேமலதா தம்பதியருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.
இதைக்குறித்து தனது சமூக வலைதள பக்கத்தில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியதாவது,
28-வது திருமண நாளான இன்று கழக நிர்வாகிகள், மாவட்ட கழக செயலாளர்கள், சார்பு அணியினர், மகளிர் அணியினர், தொழிற்சங்க நிர்வாகிகள் மற்றும் கழக தொண்டர்கள் ஆகிய அனைவரும் எங்களை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர் என்று விஜயகாந்த் கூறியுள்ளார்.
28 வது திருமணநாளான இன்று (31.01.2018) கழக நிர்வாகிகள், மாவட்ட கழக செயலாளர்கள், சார்பு அணியினர், மகளிர் அணியினர், தொழிற்சங்க நிர்வாகிகள் மற்றும் கழக தொண்டர்கள் என அனைவரும் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். pic.twitter.com/UFk6SHzuiW
— Vijayakant (@iVijayakant) January 31, 2018
தேமுதிக நிர்வாகிகள், தொண்டர்களுடன் தனது 28_வது திருமண தினத்தை கொண்டாடிய வீடியோவையும் தனது சமூக வலைதள பக்கத்தில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் பகிர்ந்துள்ளார்.