முன்னேற்றத் திட்டங்கள் எதுவும் இல்லாத வழக்கமான பட்ஜெட்: விஜயகாந்த் அறிக்கை

நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்த பட்ஜெட் வரவேற்கும்படியாகவும், குறைகூறும் விதமாக இல்லாமல் நடுநிலையாக உள்ளது என தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் அறிக்கை.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Aug 13, 2021, 07:37 PM IST
முன்னேற்றத் திட்டங்கள் எதுவும் இல்லாத வழக்கமான பட்ஜெட்: விஜயகாந்த் அறிக்கை title=

சென்னை: தமிழக சட்டமன்ற 2021-2022 ஆம் ஆண்டிற்கான பட்ஜெட் தொடர் இன்று  காலை 10 மணிக்கு சென்னை கலைவாணர் அரங்கில் தொடங்கி நடைபெற்று முடிந்தது. தமிழக முதலமைச்சராக மு க ஸ்டாலின் பொறுப்பேற்றபின் தாக்கல் செய்யப்பட்ட முதல் பட்ஜெட் கூட்டத் தொடர் இதுவாகும்.

சட்டமன்ற வரலாற்றிலேயே காகிதமில்லா முறையில் இ-பட்ஜெட் முதன் முதலாக இன்று தாக்கல் செய்யப்பட்டது. இந்த பட்ஜெட்டினை பார்ப்பதற்கும், படிப்பதற்கும் வசதியாக சட்டமன்ற உறுப்பினர்களின் இருக்கை முன் கணினி பொருத்தப்பட்டு இருந்தது. இதில் சட்டமன்ற உறுப்பினர்கள் பட்ஜெட் கூட்டத்தொடரை பிடிஎஃப் வடிவில் படித்துக் கொள்வதற்கு வசதியாக அமைக்கப்பட்டிருந்தது.

நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் (Palanivel Thiagarajan) பட்ஜெட் தொடர்பாக சுமார் 3 மணி நேரம் உரையாற்றினார். அதில் பல்வேறு துறைகளுக்கு நிதி ஒதுக்கீடும் முக்கிய அம்சங்களும் இடம் பெற்றிருந்தது.

முக்கியமாக பெட்ரோல் வரி குறைப்பு மற்றும் பெண்களின் மகளிர் சுயஉதவி குழுக்கள் கடன் தள்ளுபடி தலைமைச் செயலகம் முதல் அரசு அலுவலகங்கள் வரை தமிழ் அலுவல் மொழியாக்கப்படும் போன்றவை குறிப்பிடத்தக்க அம்சங்களாக பார்க்கப்படுகின்றது.

ALSO READ | TN Budget 2021-22: PTR பட்ஜெடட்டில் எந்த துறைக்கு எவ்வளவு ஓதிக்கீடு

இதற்கிடையில் இன்று வெளியான பட்ஜெட் (TN Budget) குறித்து தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் (Vijayakanth) அவர்கள் இந்த பட்ஜெட் நடுநிலையாக உள்ளது என அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார். அதில் அவர் குறிப்பிட்டுள்ளது.

"தமிழக வரலாற்றில் முதல் முறையாக காகிதம் இல்லாத இ பொது பட்ஜெட் தாக்கல் செய்ததற்கு தே.மு.தி.க வரவேற்பு தெரிவிக்கிறது. இந்த பட்ஜெட்டில் புதுமையான திட்டங்கள் மற்றும் முன்னேற்ற திட்டங்கள் எதுவும் இல்லாத வழக்கமான பட்ஜெட்டாக தான் இது இருக்கிறது.

பட்ஜெட்டில் மின்சாரத்துறை மற்றும் போக்குவரத்து துறையினைப் பற்றி தெளிவான விளக்கங்கள் எதுவும் தரப்படவில்லை. மக்கள் மீது அதிக வரி சுமத்துவதற்கான வாய்ப்புகள் உள்ளது போல் இந்த பட்ஜெட் அமைந்துள்ளது.

மிகப்பெரிய வரவேற்பு பெற்ற அம்மா உணவகத் திட்டத்தை தொடர்ந்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வருவதற்கான எந்த அறிவிப்பும் இடம்பெறவில்லை. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு தி.மு.க ஆட்சியை விட்டு போகும் முன்பு ஒரு லட்சம் கோடிக்கும் மேல் கடன் இருந்தது என அ.தி.மு.க கூறியிருந்தது. தற்போது தி.மு.க ஆட்சிக்கு வந்தவுடன் அ.தி.மு.க ஆட்சியில் 5 லட்சம் கோடிக்கும் மேல் கடன் உள்ளது எனக் கூறுவதிலிருந்து பட்ஜெட் வாசிப்பது என்பது சடங்காக தான் இருக்கிறதே தவிர சரித்திரமாக இன்னும் மாறவில்லை என்பது தெள்ளத் தெளிவாக தெரிகிறது.

ALSO READ | TN Budget 2021: மகளிருக்கு பலன் அளிக்கும் திட்டங்கள்; முழு விபரம்..!!

இனிவரும் காலங்களிலாவது பட்ஜெட் என்பது சரித்திரமாக மாற வேண்டும். பட்ஜெட் வாசிப்பவர்கள் ஆண்ட கட்சியை குறை சொல்வதும், நிதிப்பற்றாக்குறையில் உள்ளதாகவும், கடனில் விட்டு சென்றதாகவும் கூறுவதிலிருந்தே வழக்கமான பட்ஜெட்டாக தான் இதை பார்க்க முடிகிறது.

தமிழகத்தின் கடன் சுமைக்காக நாளொன்றுக்கு வட்டி மட்டுமே  சுமார் 87கோடி செலுத்தி வருவதாகவும், இந்த வட்டி சுமை இல்லையென்றால் வேலைவாய்ப்பு, உள்கட்டமைப்பு போன்ற பல புதிய திட்டங்களை தமிழகத்திற்கு கொண்டு வர முடியும். இது போன்ற ஆக்கப்பூர்வமான அறிவிப்புகளை தான் தமிழக மக்களும் எதிர்பார்க்கிறார்கள்.

"பெட்ரோல் விலை ரூ.5 குறைக்கப்படும் என தி.மு.க தேர்தல் வாக்குறுதி அளித்திருந்த நிலையில், பெட்ரோல் மீதான வரியில் தற்போது 3 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 100ரூபாய்க்கு கீழ் பெட்ரோல் விலை குறைந்துள்ளதாகவும் இது சாமானிய மக்களுக்கு மகிழ்ச்சியினை ஏற்படுத்தியுள்ளதால் பெட்ரோல் விலை குறைப்பு தே.மு.தி.க வரவேற்கிறது என கூறியுள்ளார். மேலும் அரசு ஊழியர்களுக்கு பேறுகால விடுப்பு 12 மாதமாக அறிவித்துள்ளதை தே.மு.தி.க வரவேற்கிறது.

"எனவே இந்த பட்ஜெட் பெரிய அளவிலான வரவேற்பும் இல்லாமல் குறை சொல்ல முடியாமாலும் "நடுநிலை பட்ஜெட்டாக அமைந்துள்ளது. ஆட்சிகள் மாறினாலும் , காட்சிகள் மாறவில்லை. இது வழக்கமான சம்பிரதாய பட்ஜெட்டாகவே பாரக்கப்படுவதாக தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

ALSO READ | TN Budget 2021: பெட்ரோல் விலை மீதான வரி லிட்டருக்கு ரூ. 3 குறைப்பு: நிதியமைச்சர் PTR

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News