பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு!!

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளன.

Last Updated : Apr 19, 2019, 09:43 AM IST
பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு!! title=

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளன.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பிளஸ்2 பொதுத்தேர்வுகள் கடந்த மாதம் 1-ம் தேதி தொடங்கி 19-ம் தேதி வரை நடைபெற்றது. சுமார் 8 லட்சத்து 87 ஆயிரம் மாணவ-மாணவிகள் இத்தேர்வை எழுதினார்கள். 

இந்நிலையில் பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவுகள் இன்று  காலை 9.30 மணிக்கு வெளியிடப்பட்டன. இதுதவிர தனித்தேர்வர்களின் தேர்வு முடிவுகளும், பிளஸ்-1 மார்ச், ஜூன் பருவ தேர்வுகளில் தேர்ச்சி பெறாத பாடங்களை மார்ச் 2019-ல் எழுதிய தேர்வர்களின் தேர்வு முடிவுகளும் வெளியிடப்பட்டன. 

தேர்வர்கள் www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in ஆகிய இணையதளங்களுக்கு சென்று தங்களுடைய பதிவு எண், பிறந்த தேதி, மாதம், ஆண்டை பதிவு செய்து தேர்வு முடிவுகளை மதிப்பெண்களுடன் தெரிந்து கொள்ளலாம்.

Trending News