குடியுரிமை மசோதாவுக்கு எதிராக டிசம்பர் 17-ம் தேதி போராட்டம் நடத்தப் போவதாக திமுக அறிவித்துள்ளது.
பாராளுமன்றத்தில் குடியுரிமை சட்டத்திருத்த மசோதா நிறைவேறியது. இந்த குடியுரிமை சட்டத்திருத்தத்திற்கு வடகிழக்கு மாநிலங்களில் கடுமையான எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட குடியுரிமை மசோதாவுக்கு எதிராக டிசம்பர் 17ம் தேதி போராட்டம் நடத்தப் போவதாக திமுக அறிவித்துள்ளது. இதுதொடர்பாக திமுக சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்;
குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிராக டிசம்பர் 17ம் தேதி மாவட்டம் தோறும் திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும். சிறுபான்மையினர், இலங்கை தமிழர்களுக்கு துரோகம் செய்த பா.ஜ.க.- அ.தி.மு.க.வை கண்டித்து இந்த போராட்டம் நடைபெறும்.
தமிழர் விரோத #CAB2019 வெற்றி பெறுவதற்கு மாநிலங்களவையில் அதிமுக ஆதரவளித்தது முக்கிய காரணமாகிவிட்டது!
பாஜக அரசின் சிறுபான்மையினர் - தமிழர் விரோத செயல்களுக்கு ஆதரவளிக்கும் தமிழின விரோத அதிமுக அரசைக் கண்டித்து, 17-12-2019 அன்று மாவட்டந்தோறும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும். pic.twitter.com/9L1V6P43zO
— M.K.Stalin (@mkstalin) December 12, 2019
என தெரிவிக்கப்பட்டுள்ளது.