ஆமைக்கறி சமைத்து சாப்பிட்டவர்கள் யார்? வனத்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை

Mudumalai forest: வன பகுதியில் ஆமையை வேட்டையாடி சமைக்கும் காட்சிகள் சமூக வலை தளங்களில் வைரலான நிலையில்,முதுமலை புலிகள் காப்பகம் மற்றும் சத்தியமங்கலம் புலிகள் காப்பக கள இயக்குநர்கள் தலைமையில் விசாரணை தொடங்கியுள்ளது.  

Written by - S.Karthikeyan | Last Updated : Dec 17, 2023, 06:42 PM IST
  • ஆமைக்கறி சமையல் வீடியோ வைரல்
  • வனப்பகுதிக்குள் சமைத்து சாப்பிட்ட கும்பல்
  • முதுமலை வனத்துறையினர் தேடுதல் வேட்டை
ஆமைக்கறி சமைத்து சாப்பிட்டவர்கள் யார்? வனத்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை title=

மலை மாவட்டமான நீலகிரி 65 சதவீத வன பகுதியை கொண்டுள்ளது. இந்த வன பகுதிகளில் யானை, புலி, சிறுத்தை, கரடி, காட்டெருமை, மான்கள் உள்ளிட்ட ஏராளமான வன விலங்குகளும், ஆமை, நட்சத்திர ஆமை, முதலை, கழுதை புலி  உள்ளிட்ட உயிரினங்களும் காணபடுகின்றன. இந்நிலையில் சமீபகாலமாக வன விலங்குகள் இறைச்சி மற்றும் தோலுக்காக வேட்டையாடபடுவது அதிகரித்துள்ளது. குறிப்பாக  கேத்தி, பாலாடா பகுதியில் காட்டெருமையை இறைச்சிக்காக துப்பாக்கியால் சுட்டு கொல்லபடுகின்றன.

மேலும் படிக்க | அடுத்த 48 மணிநேரமும் மழை தான்... தென் மாவட்டங்களுக்கு எச்சரிக்கை - முழு விவரம்

நேற்றைய தினம் கோத்தகிரி கீழ் தட்ட பள்ளம் பகுதியில் சுருக்கில் சிக்கிய சிறுத்தையின் 3 கால்கள் வெட்டபட்டிருந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்ப்படுத்தியது. இது குறித்த விசாரணை நடைபெற்றுக் கொண்டிருக்கும் சமயத்தில் வன பகுதியில் ஆமையை கொன்று சமைத்து சாப்பிடும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. இந்த காட்சி முதுமலை புலிகள் காப்பபகமும், சத்திய மங்கல புலிகள் காப்பக வனத்தை இணைக்கும் பகுதி எனவும் தகவல் பரவி வருகிறது. அந்த வீடியோவில் ஆமையை நெருப்பில் சுட்டு சமைக்கின்றனர்.

குழுவாக வனப்பகுதியில் சென்ற சிலர் இந்த சம்பவத்தில் ஈடுப்பட்டுள்ளனர். ஆனால் இந்த வீடியோ எப்போது எடுக்கப்பட்டது? என்பது குறித்த தகவல் இன்னும் வெளியாகவில்லை. சமூகவலைதளங்களில் வைரலான வீடியோவின் அடிப்படையில் இந்த சமூக விரோத கும்பல் குறித்து விசாரணை தொடங்கியுள்ளது. முதுமலை புலிகள் காப்பக கள இயக்குநர் வெங்கடேஷ் தலைமையிலும், சத்திய மங்கலம் புலிகள் காப்பக சரணாலய கள இயக்குநர் தலைமையிலான வனத்துறை குழுவினர் வன பகுதியில் ஆமையை சமைத்து சாப்பிட்டவர்கள் குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

மேலும் படிக்க | சென்னையில் இவர்களுக்கு கூடுதலாக ரூ.12,500 நிவாரணம் - காரணம் இதுதான்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News