வெளிநாடுகளில் இருந்து பல கோடி ரூபாய் மதிப்புள்ள ஐம்பொன்சிலைகள் மீட்பு

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள தொன்மையான கோவில்களில் இருந்து ஐம்பொன் சிலைகள் களவாடப்பட்டு வெளிநாடுகளுக்கு கடத்தப்பட்டன .

Last Updated : Jun 5, 2022, 10:58 AM IST
  • சிலைகள் தொடர்பான ஆவணங்களை அந்தந்த நாடுகளில் உள்ள தூதரகங்கள் மூலம் மீட்க நடவடிக்கை.
  • 10 சிலைகளும் சிலை திருட்டு வழக்குகளை விசாரிக்கும் கும்பகோணம் சிறப்பு நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்படும்.
  • அருங்காட்சியகங்களில் இருந்து சிலைகள் மீட்கப்பட்டுள்ளது.
வெளிநாடுகளில் இருந்து பல கோடி ரூபாய் மதிப்புள்ள ஐம்பொன்சிலைகள் மீட்பு title=

தமிழகத்தின் பல்வேறு கோயில்களில் இருந்து களவாடப்பட்டு, வெளிநாடுகளுக்கு கடத்தப்பட்ட சிலைகளில் அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா நாடுகளில் இருந்து மீட்கப்பட்ட 10 ஐம்பொன் சிலைகள் இன்று இரவு கும்பகோணம் சிலை திருட்டு தடுப்பு காவல் துறை அலுவலகத்திற்கு கொண்டு வரப்பட்டது .

திங்கள்கிழமை இந்த சிலைகள் சிலை திருட்டு வழக்குகளை விசாரிக்கும் கும்பகோணத்தில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட உள்ளது. தமிழக சிலை திருட்டு காவல்துறை வரலாற்றில் முதன்முதலாக அதிகமான சிலைகள் மீட்கப்பட்டது தற்போது தான் என காவல்துறையினர் தகவல்.

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள தொன்மையான கோவில்களில் இருந்து ஐம்பொன் சிலைகள் களவாடப்பட்டு வெளிநாடுகளுக்கு கடத்தப்பட்டன. இவ்வாறு கடத்தப்பட்ட பல சிலைகளில் தற்போது 10 ஐம்பொன் சிலைகள் அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா நாடுகளில் உள்ள அருங்காட்சியகங்களில் இருந்து மீட்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க | பட்டினப்பிரவேசமும் ஆதீனங்களின் குமுறலும்: மத்திய அரசிடம் செல்லுமா புகார் பட்டியல்

தஞ்சாவூர் மாவட்டம் புன்னைநல்லூர் கைலாசநாதர் கோவிலிலிருந்து நடராஜர் சிலை, திருநெல்வேலி மாவட்டம் ஆழ்வார்குறிச்சி நரசிங்க நாதர் கோவிலிலிருந்து கங்காள மூர்த்தி சிலை,  இதே கோவிலிலிருந்து நந்திகேஸ்வரர் சிலை, அரியலூர் மாவட்டம் சுத்தமல்லி வரதராஜ பெருமாள் கோவிலில் இருந்து விஷ்ணு சிலை,  இதே கோவிலில் இருந்து ஸ்ரீ தேவி சிலை, தஞ்சாவூர் மாவட்டம் தீபாம்பாள்புரம் வான்மீக நாதர் கோவிலில் இருந்து  சிவன், பார்வதி சிலை, நாகை மாவட்டம் சாயவனேஸ்வரர் கோவிலிலிருந்து ஞானசம்பந்தர் சிலை, பெயர் தெரியாத கோவிலில் இருந்து  நடனமாடும் ஞானசம்பந்தர் சிலை ஆகியவை பல்வேறு காலகட்டங்களில் களவாடப்பட்டு வெளிநாடுகளுக்கு கடத்தி  செல்லப்பட்டன

.

இச்சிலைகள் பற்றி உரிய வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, சிலைகள் தொடர்பான ஆவணங்களை அந்தந்த நாடுகளில் உள்ள தூதரகங்கள் மூலம் மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இதன் ஒரு பகுதியாக அமெரிக்க நாட்டில் இருந்து 6 சிலைகளும், ஆஸ்திரேலிய நாட்டில் இருந்து நான்கு சிலைகளும் இந்திய அரசிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்திய அரசிடம் ஒப்படைக்கப்பட்ட சிலைகளை தமிழக சிலை திருட்டு தடுப்பு காவல் துறை வசம் டில்லியில் ஒப்படைக்கப்பட்டது.

அவ்வாறு டெல்லியில் ஒப்படைக்கப்பட்ட சிலைகள் இன்று இரவு கும்பகோணத்தில் உள்ள சிலை திருட்டு தடுப்பு காவல் துறை அலுவலகத்திற்கு பலத்த பாதுகாப்புடன் கொண்டு வரப்பட்டது.

இங்கு கொண்டு வரப்பட்ட 10 சிலைகளும் திங்கள்கிழமை சிலை திருட்டு வழக்குகளை விசாரிக்கும் கும்பகோணத்தில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் ஒப்படைக்க உள்ளதாக சிலை திருட்டு தடுப்பு காவல் துறை ஏடிஎஸ்பி ராஜாராமன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

இச்சிலைகள் மீட்கப்பட்டது தொடர்பாக ஏடிஎஸ்பி அசோக் நடராஜன் தகவல் தெரிவித்துள்ளார். தற்போது மீட்கப்பட்ட இந்த பத்து சிலைகளின் மதிப்பு சர்வதேச அளவில் பல நூறு கோடி ரூபாய்க்கு மேல் இருக்கும் என கூறப்படுகிறது.

மேலும் படிக்க | இந்த ஆண்டு ஹஜ் யாத்திரைக்கு பத்து லட்சம் பேருக்கு அனுமதி: சவுதி அரேபியா

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYe

 

Trending News