அண்ணாமலைக்கு எதிராக கிரிமினல் வழக்கு : திமுக அதிரடி..!

முதலமைச்சர் மு.க ஸ்டாலினின் துபாய் பயணம் குறித்து அவதூறாக பேசிய மாநில பாஜக தலைவர் அண்ணாமலையிடம் 100 கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு திமுக நோட்டீஸ் அனுப்பியுள்ளது. 

Written by - Dayana Rosilin | Last Updated : Mar 26, 2022, 04:51 PM IST
  • மு.க ஸ்டாலினை அவதூறாக பேசிய அண்ணாமலை
  • மன்னிப்புக் கோர வேண்டும் என திமுக எச்சரிக்கை
  • ரூ.100 கோடி நஷ்ட ஈடு கேட்டு நோட்டீஸ்
அண்ணாமலைக்கு எதிராக கிரிமினல் வழக்கு : திமுக அதிரடி..!  title=

துபாயில் நடைபெறும் சர்வதேச கண்காட்சியில் தமிழ்நாடு சார்பில் அமைக்கபட்டுள்ள அரங்கினை திறந்து வைப்பதற்காக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அரசு முறை பயணமாக அங்கு சென்றுள்ளார். தமிழக முதலமைச்சராக ஸ்டாலின் பதவியேற்ற பிறகு, அவர் செல்லும் முதல் வெளிநாட்டு சுற்றுப் பயணம் இது. அங்கு சென்ற அவர், முன்னணி தொழில்நிறுவன தலைமை அதிகாரிகளை நேரில் சந்தித்து பேசியுள்ளார்.

இதன் காரணமாக வரும் காலங்களில் தமிழகத்தை நோக்கி வெளிநாட்டு முதலீடுகள் வரும் சூழல் உருவாகியுள்ளது. இந்நிலையில், முதல்வரின் இந்த பயணம் குறித்து விமர்சிக்கும் வகையில் மாநில பாஜக தலைவர் அண்ணாமலை, செய்தியாளர்களுக்கு பேட்டியளித்திருந்தார். குறிப்பாக, துபாயில் நடைபெறும் விழாவில் தமிழகம் சார்பிலான அரங்கைத் திறந்து வைக்க எதற்கு அவ்வளவு பணம்.?  எனவும் அரசு பணத்தை முதலமைச்சர் வீணடிக்கிறார் என்ற நோக்கத்திலும் பேசியிருந்தார்.

அண்ணாமலையின் இந்த பேச்சிற்கு திமுகவின் முக்கிய அரசியல் தலைவர்கள், தொண்டர்கள், அமைச்சர்கள் என பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். அது மட்டுமில்லாமல், முதலமைச்சர் மு.க ஸ்டாலினை இழிவாக பேசிய அண்ணாமலை அடுத்த 24 மணி நேரத்தில் மன்னிப்புக் கோர வேண்டும் எனவும் இல்லை என்றால் சட்ட ரீதியிலான நடவடிக்கைகள் பாயும் எனவும் திமுகவின் தலைமை எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும்,   அண்ணாமலையிடம் 100 கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு நோட்டீஸூம் அனுப்பப்பட்டுள்ளது. 

மேலும் படிக்க | விருதுநகர் பாலியல் வழக்கு: இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்-சீமான்!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR 

Trending News