கோவை வனக்கோட்டம், போளுவாம்பட்டி வனச்சரகம், வெள்ளப்பதி பிரிவு,பூண்டி தெற்கு சுற்று, கரியன் படுகை சராகப் பகுதியில் 23.10.2021 ம் தேதி போலாம்பட்டி பிளாக் 2 காப்புக்காட்டில் ரோந்துபணியின் போது இறந்த ஆண் யானை ஒன்று முற்றிலும் சிதிலமடைந்த நிலையில் கண்டறியப்பட்டது.
இறந்த யானையின் உடலினை காட்டுப்பன்றி, முள்ளம்பன்றி போன்ற காட்டு விலங்குகளால் உண்ணப்பட்டு இழுத்துச் சென்று இறந்த யானையின் எலும்புகள் மட்டுமே அவ்விடத்தில் காணப்பட்டது. யானை இறந்து சுமார் 40 நாட்கள் ஆகி இருக்கலாம் எனவும் இறந்த யானையின் வயது சுமார் 25-30 இருக்கலாம் எனவும் வனக்கால்நடை மருத்துவரின் ஆய்வில் தெரிவிக்கப்பட்டது.
எனினும் யானையின் உடலில் தந்தங்கள் காணப்படவில்லை. ஆதலால் இது தொடர்பாக குற்ற வழக்கு 3/2021 பதிவு செய்யப்பட்டு கோவை வனக்கோட்ட உதவி வனப்பாதுகாவலர் மற்றும் வனச்சரக அலுவலர் தலைமையில் 5 தனி குழுக்கள் அமைத்து 5 தினங்கள் இரவு பகலாக தீவிர தேடும் பணியில் ஈடுபட்ட நிலையில், 28.10.2021ம் தேதி அடர்வனப்பகுதிக்குள் முட்புதரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த இரண்டு தந்தங்களை முட்புதரில் இருந்தது கண்டறிந்து கைப்பற்றினர்.
ALSO READ | 400 ஆண்டுகள் பழமையான நிருத்ய விநாயகர் சிலை கடத்தல் முறியடிப்பு
யானை தந்தம் கைப்பற்றப்பட்ட இப்பகுதி யானை இறந்த பகுதியில் இருந்து சுமார் 430 மீட்டர் தொலைவில் உள்ள பகுதியாகும். பின்னர் 29.10.21 ம் தேதி கோவை மண்டல வன கால்நடை மருத்துவர் மற்றும் கோட்ட உதவி வனபாதுகாவலர் தலைமையில் இறந்த யானையினுடைய தந்தங்கள் தான் கண்டுபிடிக்கப்பட்ட தந்தங்கள் என்று ஆய்வு செய்யப்பட்டு உறுதி செய்யப்பட்டது.
பின்னர் தொடர் புலன் விசாரணை மேற்கொள்ள பட்டு காவல்துறை கைரேகை நிபுணர்கள், சைபர் செல் உதவி பெறப்பட்டது. இவ்விசாரணையின் தொடர்ச்சியாக இக்குற்றத்தில் தொடர்புடைய தானி கண்டி வனக்கிராமத்திலிருந்து மருதுபாண்டி (27), தம்பி (எ) ராமன்(50), சின்னான்(50) ஆகியோரை விசாரித்ததில் இவர்கள் சுமார் 18 நாட்களுக்கு முன் கீரை மற்றும் மூங்கில் குருத்து எடுக்க சென்றபோது இறந்து கிடந்த யானையினுடைய தந்தத்தை திருடி எடுத்து அதனை விற்கும் நோக்கத்துடன் மறைத்து வைத்திருந்த குற்றத்தை ஒப்புக் கொண்டதனர். பின்னர் இவர்கள், நபர்களை கைது செய்து கோவை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி குற்றவியல் நீதி மன்ற நடுவர் அவர்களின் உத்தரவின் பேரில் பவானிசாகர் கிளை சிறைச்சாலைக்கு அனுப்பிவைக்க பட்டனர்.
ALSO READ | தீபாவளி நாளில் சோகம்! பட்டாசுகள் வெடித்ததில் தந்தை-மகன் உடல் சிதறி பலி!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR