தமிழக அரசு கடந்த சில தினங்களுக்கு முன்பு தமிழகம் முழுவதும் உள்ள 500 டாஸ்மார்க் கடைகள் மூட உத்தரவிட்டது. 2021 சட்டமன்றத் தேர்தலில் தமிழக முதல்வர் ஸ்டாலின், எம்.பி. கனிமொழி, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தேர்தல் பரப்புரையில் தமிழகத்தில் பூரண மதுவிலக்கு கொண்டுவரப்படும் என தேர்தல் வாக்குறுதி அளித்து இருந்தார். இரண்டு வருடங்களுக்கு பிறகு தமிழகம் முழுவதும் உள்ள 500 டாஸ்மார்க் கடைகள் மூடப்படும் என கடந்த சில தினங்களுக்கு முன்பு அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்தார், இதை அடுத்து கோவை மாவட்டம் முழுவதும் 20 மதுபான கடைகள் மூடப்பட்டது, இதில் பொள்ளாச்சி அருகே உள்ள துறையூர் கிராமத்தில் உள்ள டாஸ்மார்க் கடை எண் 2286, நான்கு வருடங்களுக்கு முன்பு மூடப்பட்டது. டாஸ்மாக் நிர்வாகம் சார்பில் மூடப்படும் கடைகள் எண்ணிக்கையில் துறையூர் கடையும் உள்ளது என்பது ஆச்சரியமான விஷயமாகும்.
மேலும் படிக்க | டாஸ்மாக்கில் கூடுதல் விலைக்கு மது விற்றால் டிஸ்மிஸ் - அமைச்சர் முத்துசாமி எச்சரிக்கை
இந்நிலையில், மதுபாட்டில்கள் கூடுதல் விலைக்கு விற்பனை செய்பவர்கள் மீது அபராதம், பணிமாறுதல் செய்யப்படுகிறது. மேலும் அதிக புகார் வந்தால் ஏற்கனவே பணியிடை நீக்கம் செய்யப்பட்டு வருகின்றனர் என ஈரோட்டில் மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை அமைச்சர் முத்துசாமி பேட்டி அளித்துள்ளார். ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் 181 பேருக்கு நலத்திட்ட உதவிகள் இருசக்கர வாகனம் உள்ளிட்ட உபகரணங்கள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் பங்கேற்ற தமிழக வீட்டு வசதி துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வு துறை அமைச்சர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அமைச்சர் சு முத்துசாமி, மதுபாட்டில்கள் கூடுதல் விலைக்கு விற்பனை செய்பவர்கள் மீது அபராதம், பணிமாறுதல் செய்யப்படுகிறது. மேலும் அதிக புகார் வந்தால் ஏற்கனவே பணியிடை நீக்கம் செய்யப்படு வருகின்றனர்.
எதிர்கட்சிகள் புகார் தெரிவிப்பது சாதாரணமான விசயம் என்றும் அவர்கள் தெரிவிப்பும் அனைத்தும் உண்மை என நினைக்க முடியுமா என்றார். சில இடத்தில் தவறு நடந்துள்ளதை அனைத்து இடங்களிலும் நடந்துள்ளதாக சித்தரிக்கின்றனர் புகார் வந்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்.
டாஸ்மாக் கடையில் வியாபாரத்தை கூட்ட செல்லவில்லையே தவிர அங்குள்ள கஷ்டத்தை பார்க்க நேரில் சென்று ஆய்வு செய்தோம். மது விற்பனை நேரம் குறைப்பது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்குகள் நிலுவையில் உள்ளது.இதில் உள்ள பிரச்சனைகள் குறித்து ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும்.
மதுக்கடையில் வியாபாரம் அதிகமானால் பெருமை இல்லை-குறையவேண்டும் என நினைக்கிறோம் என்றார். 500 டாஸ்மாக் கடைகளை மூடிவிட்டோம் என கூறுகின்றனர், எங்கேயாவது உதாரணம் காண்பிக்க சொல்லுங்கள் பார்க்கலாம், ஏதோ விற்பனையாகாமல் உள்ளதை மூடி கண்துடைப்பு நாடகம் நடத்துகின்றனர் என பிரேமலதா விஜயகாந்தும் கூறியுள்ளார்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ