சர்வதேச அளவிலான சிலம்பம் போட்டியில் பத்து தங்கம் உட்பட 16 பதக்கங்கள் பெற்று ஒட்டு மொத்த சாம்பியன்ஷிப் பட்டம் வென்று அசத்திய கோவை வீரர், வீராங்கனைகுக்கு வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளன. அந்தமானில் சர்வதேச அளவிலான சிலம்ப போட்டி நடைபெற்றது. அதில் கோவை வீரர், வீராங்களைகள் 10 தங்கம் உட்பட 16 பதக்கங்களை வென்று சாம்பியன்ஷிப் பட்டம் வென்றுள்ளனர். கோவை திரும்பிய வீரர்,வீராங்கனைகளுக்கு இரயில் நிலையத்திலேயே மேள தாளம் முழங்க உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
யூத் கேம்ஸ் பெடரேஷன் ஆஃப் இந்திய சிலம்பம் மற்றும் அந்தமான் தமிழர் சங்கம் சார்பாக சர்வதேச அளவிலான சிலம்ப போட்டிகள் கடந்த 2 ,3 ,4 ஆகிய தேதிகளில் அந்தமானில் நடைபெற்றது. இந்தியா, அந்தமான் இலங்கை ஆகிய நாடுகளுக்கு இடையே நடைபெற்ற இப்போட்டியில் இந்தியா சார்பாக கோவை சூலூர் பகுதியை சேர்ந்த ரௌத்தி்ரம் அகாடமியை சேர்ந்த மாணவ, மாணவிகள் சுமார் 13 பேர் கலந்து கொண்டனர்.
மேலும் படிக்க | மது பிரியர்களே உஷார்! காலாவதியான மது பாட்டில்கள் விற்பனை!
ஒற்றைக்கம்பு, இரட்டைக்கம்பு, சுருள்வாள், மான் கொம்பு, வாள் வீச்சு என பல்வேறு பிரிவுகளாக நடைபெற்ற போட்டிகளில், 13 ,15 ,17 ,19,,21 ஆகிய வயது பிரிவுகளில் மொத்தம் 10 தங்கம் மற்றும் 6 வெள்ளி உட்பட 16 பதக்கங்களை இவர்கள் வென்று அசத்தினர். அதே போல ஒட்டு மொத்த சாம்பியன்ஷிப் கோப்பையையும் கோவை வீரர்கள் வென்று அசத்தியுள்ளனர்.
இந்த நிலையில் கோவை இரயில் நிலையம் திரும்பிய வெற்றி வீரர், வீராங்கனைகளுக்கு மேள தாளம் முழங்க உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதில் பயிற்சியாளர்கள் வினோத், வெங்கடேஷ், பாண்டீஸ்வரி உட்பட பெற்றோர்கள் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டு இந்தியாவிற்கு பெருமை சேர்ந்த வெற்றியாளர்களுக்கு மாலை அணிவித்து இனிப்புகள் வழங்கி தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்,
மேலும் படிக்க | பரட்டை ஆனா ஒரிஜினல்! மறைமுக தாக்குதல் நடத்தும் தமிழக பாஜக முன்னாள் தலைவர்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ