கோவை: ரூ.50 கடன் வழங்க மறுத்த உறவினருக்கு கத்திக்குத்து!

கோவை அருகே 50 ரூபாய் கடன் கொடுக்க மறுத்த உறவினரை கத்தியால் குத்திய தொழிலாளியை போலீஸார் கைது செய்தனர். 

Written by - Arunachalam Parthiban | Last Updated : Apr 29, 2022, 05:28 PM IST
  • கோவை அருகே வெறும் 50 ரூபாய் பணம் கடனாக கேட்ட உறவினர்
  • ஏற்கெனவே வாங்கிய கடனை தராததால் மீண்டும் கடன் வழங்க மறுப்பு
  • ஆத்திரத்தில் உறவினரை கத்தியால் குத்திய நபர் கைது
கோவை: ரூ.50 கடன் வழங்க மறுத்த உறவினருக்கு கத்திக்குத்து! title=

கோவை சுண்டக்காமுத்தூர் பகுதியை சேர்ந்தவர் அய்யாச்சாமி (65). இவருக்கு இரண்டு மகன்கள் மற்றும் இரண்டு மகள்கள் உள்ளனர். 4 பேரும் திருமணம் முடித்து தனித்தனியாக வசித்து வருகின்றனர். அய்யாசாமியின் மூத்த மகன் மணிகண்டன் விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் வசித்து வருகிறார். 

அவர் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு அய்யாச்சாமி பார்க்க கோவை வந்துள்ளார். அப்போது மணிகண்டன் சுண்டக்காமுத்தூர் பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்த போது, ராமசெட்டிபாளையம் பகுதியை சேர்ந்த அவரது உறவினரான சுதர்சன்(50) என்பவர் 50 ரூபாய் கடனாக கேட்டதாக தெரிகிறது. 

ஆனால் சுதர்சன் ஏற்கெனவே வாங்கிய கடன்களை தராததால் மணிகண்டன் மீண்டும் கடன் தர மறுத்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து சமாதானமடைந்த இருவரும் அங்கிருந்து பிரிந்து சென்றனர். 

ஆனால், நடந்ததை மறக்காத சுதர்சன் தனது நண்பரான ராஜேந்திரன் என்கிற மாரிசாமி (48) என்பவருடன் அய்யாசாமியின் வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு, தான் பணம் கேட்டு கொடுக்காததை கூறி மணிகண்டனை வெளியே வரச்சொல்லி தகாத வார்த்தைகளால் சத்தம் போட்டுள்ளார். 

மேலும் படிக்க | வன்முறையில் IB அதிகாரி அங்கித் சர்மா உடல் முழுவதும் 400 இடங்களில் கத்திக்குத்து!!

கூச்சல் சத்தத்தை கேட்டு வெளியே வந்த அய்யாசாமியிடம்  சுதர்சன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட போது, அவருடன் வந்த ராஜேந்திரன் திடீரென தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து அய்யாச்சாமி குத்தியதாக கூறப்படுகிறது.  இதைப்பார்த்த மணிகண்டன் ஓடிவந்து தடுக்க முயன்றபோது அவருக்கும் கத்தி குத்து விழுந்ததில் பலத்த காயம் ஏற்பட்டது. இதில் படுகாயமடைந்த இருவரும் சுண்டக்காமுத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். 

இந்த சம்பவம் தொடர்பாக அய்யாச்சாமி பேரூர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இதனடிப்படையில் ராஜேந்திரன் என்கிற மாரிசாமி மற்றும் சுதர்சன் ஆகிய இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்த போலீஸார்  ராஜேந்திரனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் தலைமறைவாக உள்ள சுதர்சனை தீவிரமாக தேடி வருகின்றனர். 

வெறும் ஐம்பது ரூபாய் கடன் கொடுக்க மறுத்ததால் உறவினரை கத்தியால் குத்தி கொலை செய்ய முயன்ற நபர்களால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் படிக்க | முட்டையால் உருவாகிய தகராறு; ஓட்டல் உரிமையாளருக்கு கத்திக்குத்து

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News