கோவை நகை கடை கொள்ளையன் தர்மபுரி காட்டுப்பகுதியில் பதுங்கல் - காவல்துறை தகவல்

கோவை ஜோஸ் ஆலுக்காஸ் நகைகடை கொள்ளையில் தொடர்புடைய கொள்ளையன் விஜய்,  தர்மபுரி மாவட்ட காட்டு பகுதியில் பதுங்கி இருக்க வாய்ப்பு உள்ளது எனவும், 5 தனிப்படை போலீசார் தொடர்ந்து தேடி வருவதாகவும் கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.  

Written by - S.Karthikeyan | Last Updated : Dec 7, 2023, 03:17 PM IST
  • கோவை நகைக்கடையில் கொள்ளை
  • முக்கிய குற்றவாளிக்கு ஸ்கெட்ச்
  • தீவிரமாக தேடும் காவல்துறை
கோவை நகை கடை கொள்ளையன் தர்மபுரி காட்டுப்பகுதியில் பதுங்கல் - காவல்துறை தகவல் title=

கோவை மாநகர காவல் துறை சார்பிலும், பொதுமக்கள் வழங்கிய பொருட்களும் சேர்த்து 5.74 லட்சம் ரூபாய் மதிப்பிலான நிவாரண பொருட்கள் காவல்துறை வாகனத்தில் இன்று சென்னை அனுப்பபட்டது. இந்த நிவாரணப் பொருட்களை கோவை மாநகர ஆணையாளர் பாலகிருஷ்ணன் லாரி மூலம் அனுப்பி வைத்தார். பின்னர்  செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் பேசும்போது, " ஜோஸ் ஆலுக்காஸ் கொள்ளை வழக்கில் முக்கிய குற்றவாளி இன்னும் பிடிபடவில்லை. ஆனால் கொள்ளையடிக்கப்பட்ட பெரும்பாலான நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

மேலும் படிக்க | சென்னையில் மழை நின்றாலும் தற்போது தொடங்கியுள்ள புதிய பிரச்சனை!

முக்கிய குற்றவாளி பிடிப்படாவிட்டாலும் கொள்ளை சம்பவத்தில் தொடர்புடைய மற்ற நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 5 தனிப்படைகள் தொடர்ந்து முக்கிய குற்றவாளியை தேடி வருகின்றனர். தர்மபுரி மாவட்டத்தில் உள்ள காட்டு பகுதியில் கொள்ளையன் விஜய் பதுங்கி இருக்க வாய்ப்பு உள்ளது. இந்த வழக்கின் முக்கிய குற்றவாளியான விஜயின் தந்தை தர்மபுரியில் தற்கொலை செய்துகொண்டது தொடர்பாக பிரிவு 174 -ல் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகிறது.

காவல்துறை விசாரணையால் அவர் உயிரிழப்பு என்று இதுவரை எந்தவித புகாரும் கொடுக்கப்படவில்லை" என தெரிவித்தார். இதனிடையே  
தருமபுரி வனப்பகுதியில்  கொள்ளையன் விஜயை தனிப்படை போலீசார் நேற்று சுற்றி வளைத்தபோது, தனிப்படை போலீசாரிடம் இருந்து தப்பிய கொள்ளையன் விஜய், தருமபுரியில் உறவினர் வீட்டிலும் நகையை திருடி விட்டு தப்பியுள்ளார். சுமார் 20 சவரன் நகையை திருடிவிட்டு தப்பிய கொள்ளையன் விஜய்யை தனிப்படை போலீசார் தொடர்ந்து தீவிரமாக தேடி வருகின்றனர்.

மேலும் படிக்க | புயல் பாதிப்பு... தமிழ்நாட்டுக்கு நிவாரண நிதி அறிவிப்பு - எவ்வளவு தெரியுமா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News