ஏழரையை விட அதிகமாய் பயமுறுத்தும் அஷ்டமச் சனி! சனிக்கிழமையன்று சனீஸ்வர வழிபாடு நலம் தரும்!

Astama Shani & Lord Shaneeswaran:  நமது செயல்களால் ஏற்படும் வினைகளுக்கு ஏற்ப நமக்கு பலன்களை கொடுத்து கர்மவினைகளை போக்கும் சனீஸ்வரரை சனியன்று வணங்குவோம்...

Written by - Malathi Tamilselvan | Last Updated : Jun 7, 2024, 10:03 PM IST
  • சனி பகவானை சனிக்கிழமையில் வழிபடலாம்
  • கர்மவினைக்கு ஏற்ப பலன்களை கொடுக்கும் சனீஸ்வரர்
  • கர்மவினைகளை போக்கும் சனீஸ்வரர் வழிபாடு
ஏழரையை விட அதிகமாய் பயமுறுத்தும் அஷ்டமச் சனி! சனிக்கிழமையன்று சனீஸ்வர வழிபாடு நலம் தரும்! title=

சனி பகவான் என்ற பெயரைக் கேட்டாலே பயப்படுபவர்கள் அதிகம். உண்மையில் சனி பகவானைப் பார்த்து பயப்பட வேண்டியது அவசியமா? நாம் செய்யும் தவறுகளை திருத்துவதற்காக நமக்கு சோதனைகள் கொடுத்தாலும், நமது பாவக்கணக்கை சீராக்கும் நீதிபதியாக செயல்படும் சனீஸ்வரர், பிறருக்கு உதவி செய்பவர்களுக்கு வாழ்க்கையில் நிம்மதியையும் மகிழ்ச்சியையும் கொடுக்கிறார்.

கட்டுப்பாடில்லாமல் போகும் வாழ்க்கையை முரைப்படுத்துவது சனி பகவான் தான் என்றால் அது மிகையாகாது. நாம் எதற்காக இந்த பூமிக்கு வந்தோம், நம் இலக்கு எது என்பதையும் வாழ்க்கையின் அர்த்தத்தையும் நமக்கு புரிய வைப்பவர் சனி பகவான் தான். அதேபோல, நவகிரகங்களில் எந்த ஒரு கிரகத்துக்கும் இல்லாத ஒரு சிறப்பு சனீஸ்வரருக்கு உண்டு.

ஒவ்வொரு கிரகத்திற்கும் இயக்கமும் வேறுபட்டது. அதில் மிகவும் மந்தமாக செயல்படும் சனிபகவான் பூமியைச் சுற்றி வருவதற்கு 30 வருடங்கள் ஆகிறது. சனி பகவான், ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்வதற்கு எடுத்துக் கொள்வதற்கு காரணம் அவர் எதையும் நிதானமாக செய்வார் என்பது தான்.

சனீஸ்வரர், ஒருவரின் ஜாதகத்தில் இருக்கும் இடத்தைப் பொறுத்து ஏழரைச்சனி, அஷ்டமச்சனி என வாழ்க்கைக்கு தேவையான அனுபவத்தையும் புரிதலையும் கொடுக்கிறார். தொழில் மற்றும் பதவியில் உயர்வடைய சனி பகவானை வழிபடலாம்.

மேலும் படிக்க | சுக்கிரனை சாந்தி செய்யும் பரிகாரங்கள்! சுக்கிரப் பெயர்ச்சியால் நன்மையடைய வழிபாடு!

ஏழரைச் சனியா அஷ்டமச் சனியா?

ஏழரைச் சனி என்றாலே பீதியடைபவர்கள் அதிகம் ஆனால், ஏழரைச் சனியை விட அஷ்டம சனிதான் மோசமானது. ஒருவருக்கு அவமானங்களையும் அலைச்சலையும் மன உளைச்சலையும் ஏற்படுத்துவது தான் அஷ்டமச்சனி. வாழ்க்கையின் எந்தவிதமான பிரச்னையையும் எதிர்கொள்வதற்குரிய துணிச்சலைத் தருபவர் சனீஸ்வரர்.

அதிலும், சனி பகவான் தனது ஆட்சியின்போது கஷ்டத்தைக் கொடுத்தாலும், ஒருவருக்கு இறுதியில் நன்மையைத் தான் செய்துவிட்டு செல்வார்.

சனியின் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள் உண்மையாக உழைப்பாளியாக இருப்பார்கள். அதிலும், மகரம், கும்பம் ஆகிய இரண்டு ராசிகளில் பிறந்தவர்கள் நல்ல உழைப்பாளியாக இருப்பார்கள். துலாம் ராசியில் உச்சமடையும் சனீஸ்வரர், மேஷ ராசியில் நீச்சம் அடைகிறார்.  ஒருவரின் ஜாதகத்தில் சனி நீச்சம் அடைந்திருந்தால் அது நல்லது என்பது தெரியுமா?

நீச்ச சனியின் பலன்கள்

பொதுவாக கடினமான உழைப்பையும் அலைச்சலையும் தரக்கூடிய கிரகமான சனி பகவான் நீச்சம் அடைந்து பலமிழந்து போனால், ஜாதகத்தில் சனி நீச்சம் பெற்றவர் சொகுசான வாழ்க்கை வாழ்வார். அதிலும், சனி நீசமாகி குருவின் பார்வை பெற்றிருந்தால், கோடீஸ்வர யோகம் ஏற்படும்.  

சனீஸ்வரரின் தீய பலன்களைக் குறைக்க சனீஸ்வர வழிபாடு உதவும். சனீஸ்வரரின் நேர்மறை சக்தியை பெறுவதற்கு சனிக்கிழமையன்று, சனீஸ்வர பகவானுக்கு எள்ளெண்ணெயில் விளக்கு போடுவது நல்லது. அதேபோலஎள் தானம் செய்யலாம்.

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்தூள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | அங்காரகரின் அன்பான பார்வையினால் அதிர்ஷ்டத்தால் தூள் கிளப்பப்போகும் ராசிகள்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News