யூடியூப்பில் அந்தரங்க வீடியோவை வெளியிடுவோம்: மிரட்டும் கும்பல் - திகைத்த பெண்கள்..!

பெண்களின் புகைப்படத்தை மாப்பிங் செய்து, அதனை யூடியூப் தளங்களில் வீடியோவாக வெளியிடுவதாக கும்பல் ஒன்று மிரட்டுவதாக 3 பெண்கள் பேட்டி கொடுத்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.    

Written by - S.Karthikeyan | Last Updated : May 14, 2023, 12:00 PM IST
  • கோவையில் பேட்டி கொடுத்த பெண்கள் அதிர்ச்சி
  • கும்பல் ஒன்று தங்களை மிரட்டுவதாக புகார்
  • அந்தரங்க வீடியோகளை தடுக்க கோரிக்கை
யூடியூப்பில் அந்தரங்க வீடியோவை வெளியிடுவோம்: மிரட்டும் கும்பல் - திகைத்த பெண்கள்..! title=

திருச்சியைச் சேர்ந்த கவிதா ,சென்னையை சேர்ந்த மும்தாஜ், கோவையைச் சேர்ந்தவரும் பாண்டிச்சேரியில் வசித்து வருபவருமான சித்ரா உள்ளிட்ட மூன்று பெண்கள் கோவையில் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய அவர்கள், ஐந்து பேர் கொண்ட கும்பல் சமூக ஊடகங்கள் மற்றும் youtube போன்ற தளங்கள் வாயிலாக பெண்களை கவர்ந்து, அவர்களிடம் நன்கு பழகி அவர்கள் வலையில் விழச் செய்வதாக தெரிவித்தனர். பின்னர் ஆசை வார்த்தைகள் கூறி அவர்களை நேரில் சந்தித்து அவர்களுக்கே தெரியாமல் அவர்களது வீட்டில் ஸ்பை கேமராக்களை நிறுவி அதன் மூலம் பெண்களின் அந்தரங்க படங்கள் மற்றும் வீடியோக்களை எடுத்து வைத்துக் கொள்வதாகவும் அதிர்ச்சி தகவல் தெரிவித்தனர்.

மேலும் படிக்க | கோவை: 5 நிமிடத்தில் 21 திருநங்கைகளுக்கு ஒப்பனை செய்து உலக சாதனை

மேலும் அந்த வீடியோக்களை மாப்பிங் செய்து அவர்களுக்கே அனுப்பி பணம் கேட்டு மிரட்டுவதாகவும், பணம் தர மறுத்தால் அந்த வீடியோக்களை அவர்களுக்கு சொந்தமான youtube தளங்களில் பதிவேற்றம் செய்வதாக மிரட்டுவதாக கூறியுள்ளனர். மேலும், பலருக்கும் அதனை அனுப்பி வைத்து மிரட்டல் விடுப்பதாகவும் தெரிவித்தனர். இது குறித்து மூவரும் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளதாகவும், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று அந்த 3 பெண்களும் குற்றம்சாட்டினர். கோவையிலுள்ள பிரபல வழக்கறிஞரை சந்தித்து சம்பவம் தொடர்பாக வழக்கு தொடுக்க இருப்பதாகவும் அவர்கள் கூறினர். 

தொடர் மிரட்டல் விடுத்தும் அந்தரங்க படங்களை யூடியூபில் பதிவேற்றம் செய்தும் வரும் நபர்களின் செயல்பாடுகளால் கவிதா என்ற பெண் இரு முறை தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாக தெரிவித்த அவர்கள், இச்செயலில் தாங்கள் மட்டுமல்லாது பல பெண்களும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறி மற்றொரு அதிர்ச்சியை தெரிவித்தனர். காவல்துறையினர் பாரபட்சமின்றி செக்ஸ் டார்ச்சர் செய்யும் இந்த நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும்  அப்பெண்கள் வலியுறுத்தியுள்ளனர்.

மேலும் படிக்க | கர்நாடக வெற்றி கலங்கரை விளக்கம்... மக்கள் மாற்றத்துக்கு தயாராகிட்டாங்க - கனிமொழி ரியாக்ஷன்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News