மீனவர்கள் விடுதலை குறித்து முதலமைச்சர் ஸ்டாலின், ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சருக்கு நேற்று எழுதிய கடிதத்தில்,"தமிழ்நாட்டைச் சேர்ந்த 23 மீனவர்களும், அவர்களது 5 மீன்பிடிப் படகுகளும் இலங்கைக் கடற்படையினரால் நேற்று (நவ .28) சிறைபிடிக்கப்பட்டுள்ளதாகவும், இந்த ஆண்டில் மட்டும் 221 தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தொடர்ந்து கைது செய்யப்படுவது மீன்பிடித் தொழிலை மட்டுமே நம்பியிருக்கும் தமிழக மீனவ சமூகத்தினரிடையே கடுமையான மன அழுத்தத்தையும் வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே நெருக்கடியான பொருளாதாரத்தை எதிர்கொண்டிருக்கும் மீனவ சமுதாயத்திற்கு நமது ஆதரவு தேவைப்படுகிறது.
இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழ்நாட்டை சேர்ந்த 23 மீனவர்களை உடனடியாக விடுதலை செய்திடவும், அவர்களுடைய மீன்பிடி படகுகளை விடுவிக்கவும் நடவடிக்கை எடுக்கக்கோரி மாண்புமிகு ஒன்றிய அமைச்சர் @DrSJaishankar அவர்களுக்கு மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள் கடிதம் எழுதியுள்ளார் pic.twitter.com/DaUS9Qcmzi
— CMOTamilNadu (@CMOTamilnadu) November 28, 2022
மேலும் படிக்க | நடுக்கடலில் இலங்கை தீவிர ரோந்து, ராமேஸ்வரம் மீனவர்கள் விரட்டியடிப்பு
மேலும், தமிழ்நாட்டின் 105 மீன்பிடிப் படகுகள் தற்போது இலங்கை வசம் உள்ளன. தொடர் முயற்சிகளின் காரணமாக கைது செய்யப்பட்ட மீனவர்கள் விடுவிக்கப்பட்டாலும், அவர்களின் மீன்பிடிப் படகுகள் இன்னும் இலங்கையின் கட்டுப்பாட்டில்தான் உள்ளது.
எனவே நமது மீனவர்கள் தொடர்ந்து இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படுவதைத் தடுத்திட வேண்டும். தற்போது, இலங்கைக் காவலில் உள்ள அனைத்து மீனவர்களையும் அவர்களின் மீன்பிடி படகுகளையும் உடனடியாக விடுவித்திட, தேவையான தூதரக முயற்சிகளை கேட்டுக் கொள்கிறேன்" என குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை கடற்படையினர் தொடர்ந்து, தமிழக மீனவர்கள் மீது தாக்குதலில் ஈடுபட்டு வருவது வாடிக்கையாகிவிட்டது. படகுகளை பறிமுதல் செய்வது மட்டுமின்றி, மீனவர்களின் வலைகளை நாசம் செய்வது, மீன்களை கடலில் கொட்டுவது என பல்வேறு அத்துமீறல்களையும் இலங்கை கடற்படை செய்துவருகிறது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பது பல்வேறு தரப்பினரின் தொடர் கோரிக்கையாக இருந்துவருகிறது.
மேலும் படிக்க | ஈஷா ‘இன்சைட்’ நிகழ்ச்சியில் ஜல் சக்தி அமைச்சர்! நீர் வளத் துறை முதலீடு பற்றி தகவல்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ